திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியின் 54ஆவது கல்லூரி நாள் விழாவில் - நெல்லை கவிநேசன்


திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியின் 54ஆவது கல்லூரி நாள் விழா நடைபெற்றது. இந்த விழாவில் புதுச்சேரி அரசின் கூடுதல் செயலாளரும், துணைநிலை ஆளுநரின் கூடுதல் செயலாளருமான திரு.டி.சுந்தரேசன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

ஆதித்தனார் கல்வி நிறுவன மேலாளர் திரு.வெங்கட் ராமராஜன் அவர்கள், கல்லூரி செயலர் டாக்டர்.பி.சுப்பிரமணியம், கல்லூரி முதல்வர் டாக்டர்.டி.எஸ்.மகேந்திரன், வணிக நிர்வாகவியல் துறை தலைவர் டாக்டர்.எஸ்.நாராயணராஜன் (நெல்லை கவிநேசன்), தாவரவியல் துறைப் பேராசிரியர் டாக்டர்.சி.பி.பாலகிருஷ்ணன் ஆகியோர் மேடையில் உள்ளனர்.

 
கல்லூரி விழா நிறைவு பெற்றபின் கல்லூரி செயலர், முதல்வர், கண்காணிப்பாளர் திரு.ராஜன், திரு.பொன்னுதுரை, திருநெல்வேலி மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை தணிக்கையாளர் திரு.சக்திகுமார், சிறப்பு விருந்தினர் திரு.சுந்தரேசன் ஆகியோரோடு டாக்டர்.எஸ்.நாராயணராஜன் (நெல்லை கவிநேசன்) மகிழ்வோடு இணைந்து பதிவு செய்த புகைப்படம். 

 

Post a Comment

புதியது பழையவை

Sports News