பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் நடைபெற்ற தேசிய கருத்தரங்க நிகழ்வில் நெல்லை கவிநேசன்

பாளையங்கோட்டை  தூய சவேரியார் கல்லூரி தன்னாட்சி தேசியக் கருத்தரங்கு-2019 அன்று [19.02.2019]  கௌசானல் அரங்கில் நடந்தது. இதில் ‘பொருநைப் பதிவுகளும் பன்முக எழுத்தாளுமைகளும்’ என்ற தலைப்பில் கட்டுரை  நூல் இரண்டு தொகுதி வெளியிடப்பட்டது. இதில் முதல் தொகுதியில் 25 வது கட்டுரையாக  ‘முத்தாலங்குறிச்சி காமராசுவின் பொருநைப்பதிவுகள்’ என்ற தலைப்பில் சாராள் தக்கர் கல்லூரி முனைவர் பட்ட ஆய்வளார் ச. மேனகா எழுதிய கட்டுரையும், 52  என்று பகுதியில் ‘எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு’ என்ற தலைப்பில்  சாயர் புரம் போப்ஸ் கல்லூரி  உதவி பேராசிரியர்  திருமதி இரா.ஆன்றோ பியோ எழில் எழுதிய கட்டுரையும் இடம் பெற்றுள்ளது.
 
இதன் நிறைவு விழாவில்  கல்வியல் கல்லூரி முதல் அருட்திரு அலெக்ஸான்டர் தலைமை வகிக்க,  பேராசிரியர் ரவிசேசு ராஜ் வாழ்த்துரை கூற,  பேராசிரியர் அந்தோணிராஜ் தொகுத்து வழங்க  தமிழ் துறை தலைவர் பிரான்சிஸ் சேவியர் வாழ்த்தி பேச, பேராசிரியர்  மாணவ-மாணவிகளின்  வழிகாட்டுதல் மன்னர்,  57 நூல் எழுதிய தமிழகத்தின் முன்னணி மாணவர் வழிகாட்டுதல்  நூல் எழுத்தாளர் பேராசிரியர் நெல்லை கவிநேசன் சிறப்புரையாற்றினார். இளம்படைப்பாளி ஆதி லெட்சுமியும் கலந்துகொண்டு பேசினார்.  கருத்தரங்க செயலாளர் பேராசிரியர் முனைவர் கவிதா நன்றி கூறினார்.
பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் நடைபெற்ற தேசிய கருத்தரங்க நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நெல்லை கவிநேசன்Post a Comment

புதியது பழையவை

Sports News