ஆதித்தனார் கல்லூரி மாநில கருத்தரங்கில் நெல்லை கவிநேசன்

ஆதித்தனார் கல்லூரி மாநில கருத்தரங்கில் நெல்லை கவிநேசன்


திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியின் வணிக நிர்வாகவியல்துறை சார்பில் மாநில கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கிற்கு சிறப்பு பயிற்சியாளராக சேலம் பெரியார் பல்கலைக்கழக இணைப்பேராசிரியர் டாக்டர்.R.சுப்பிரமணிய பாரதி M.B.A., Ph.D.,கலந்துகொண்டு மாணவ-மாணவிகளுக்கு பயிற்சியளித்தார்.

 
விழாவில் கல்லூரி முதல்வர் டாக்டர்.D.S.மகேந்திரன் தலைமையுரை ஆற்றினார். கல்லூரி செயலர் டாக்டர் P.சுப்பிரமணியம் வாழ்த்துரை வழங்கினார். முன்னதாக டாக்டர்S.நாராயணராஜன் M.B.A., Ph.D.,(நெல்லை கவிநேசன்) வரவேற்புரை நிகழ்த்தினார். முடிவில் கருத்தரங்கு ஒருங்கிணைப்பாளர் டாக்டர்.A.அந்தோணி சகாய சித்ரா M.Com., Ph.D.நன்றி கூறினார்.“வாழ்க்கைத் தொழிலை திட்டமிடல் மற்றும் வெற்றிக்கான யுக்திகள்” என்னும் தலைப்பில் நடைபெற்ற இந்த கருத்தரங்கின் அமைப்பாளராக வணிக நிர்வாகவியல் துறை டாக்டர்.S.நாராயணராஜன்M.B.A., Ph.D.,(நெல்லை கவிநேசன்) செயல்பட்டார். கருத்தரங்கின் ஒருங்கிணைப்பாளராக பேராசிரியை டாக்டர்.A.அந்தோணி சகாய சித்ரா M.Com., Ph.D.பொறுப்பேற்றிருந்தார். விழாவுக்கான ஏற்பாடுகளை பேராசிரியர்கள் A.தர்மபெருமாள் M.B.A., M.Phil.,டாக்டர்.R. கார்த்திகேயன் M.B.A. M.H.M. Ph.D., T.செல்வகுமார்M.B.A., M.Phil.,PGDHRM., மற்றும் நூலகர் முத்துக்குமார் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தார்கள்.


கருத்தரங்கில் ஏராளமான மாணவ-மாணவிகளும் பேராசிரியர்களும் கலந்துகொண்டனர்.

1 கருத்துகள்

கருத்துரையிடுக

புதியது பழையவை

Sports News