நெல்லை கவிநேசன் நூலுக்கு தினத்தந்தி பாராட்டு

நெல்லை கவிநேசன் நூலுக்கு தினத்தந்தி பாராட்டு57 நூல்களை எழுதியுள்ள திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி பேராசிரியர் டாக்டர்.S.நாராயணராஜன் M.B.A., Ph.D.,(நெல்லை கவிநேசன்) எழுதிய ஆன்மிக நூல் “அய்யா வைகுண்டர் வாழ்க்கை வரலாறு” என்பதாகும்.

இந்த நூலைப்பற்றி தினத்தந்தியின் புத்தக மதிப்புரை பகுதியில் 27.02.2019 அன்று வெளியிடப்பட்ட பாராட்டு - “சுமார் 200 ஆண்டுகளுக்குமுன்பு தமிழகத்தின் தென்பகுதியில் வாழ்ந்த மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு, சாதிக் கொடுமை தலைவிரித்து ஆடியபோது, சமுதாய சீர்திருத்த எண்ணங்களை மக்களிடம் விதைத்து மறுமலர்ச்சி உண்டாக்கிய பகவான் வைகுண்டரின் வாழ்க்கை வரலாறு மனதைத் தொடும் வகையில் தொகுத்துத் தரப்பட்டு இருக்கிறது. புத்தகத்தில் ஆங்காங்கே பகவான் வைகுண்டரின் அகிலத்திரட்டில் இருந்து சிந்தனையைத் தூண்டும் வாசகங்களைக் கொடுத்து இருப்பது சிறப்பு”.

ஆசிரியர் : நெல்லை கவிநேசன்,

வெளியீடு:
குமரன் பதிப்பகம்,
19, கண்ணதாசன் சாலை,
தி.நகர், சென்னை-17.

விலை:
ரூ.100/-
போன் : 044-24353742.


நன்றி: தினத்தந்தி.

Post a Comment

புதியது பழையவை

Sports News