கோவில்பட்டியில் புத்தகத் திருவிழா-2019

கோவில்பட்டியில் புத்தகத் திருவிழா-2019


கோவில்பட்டியில் புத்தகத் திருவிழா 15.03.2019முதல் 24.03.2019வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 


தமிழ்நாடு புத்தக விற்பனையாளர் சங்கம் மற்றும் தேசிய வாசிப்பு இயக்கம் இணைந்து நடத்தும் புத்தகத் திருவிழாவின் தொடக்க விழா கோவில்பட்டி தேவர் திருமண மஹாலில் 15.03.2019அன்று மாலை 5 மணிக்கு தொடங்கியது.


தூத்துக்குடி மாவட்ட நூலகர் திரு.ராம் சங்கர் தலைமை வகித்தார். கோவில்பட்டி ரோட்டரி சங்கத் தலைவர் திரு.ஆசியா பார்ம்ஸ் பாபு, செயலர் திரு.ரவி மாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரோட்டரி மாவட்டத் தலைவர் திரு.விநாயகா ரமேஷ் புத்தகத் திருவிழாவை திறந்து வைத்தார். பசும்பொன் கல்வி அறக்கட்டளை நிறுவனர் திரு.பரமசிவம் முதல் விற்பனையைத் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மண்டல தலைவர் திரு.ராதாகிருஷ்ணன் முதல் நூலைப் பெற்றுக்கொண்டார்.

நிகழ்ச்சியில் கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் திரு.ஜான் கணேஷ், யு.பி.மெட்ரிக் பள்ளி செயலர் திரு.ராஜு, வழக்குரைஞர் ஜெயஸ்ரீ கிறிஸ்டோபர், ரோட்டர் சாலை பாதுகாப்புப் பிரிவு மாவட்டத் தலைவர் திரு.முத்துசெல்வம், நாடார் நடுநிலைப்பள்ளி செயலர் திரு.கண்ணன், பாரதியார் நினைவு அறக்கட்டளை தலைவர் திரு.முத்து முருகன், மகிழ்வோர் மன்ற காப்பாளர்கள் திரு.மோகன் ராஜ், திரு.வெள்ளைச்சாமி ஆகியோர் வாழ்த்திப் பேசினார்கள். புத்தக விற்பனையாளர் சங்கத் தலைவர் திரு.ரவி வர்மா ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள். செயற்குழு உறுப்பினர் திரு.பாலாஜி வரவேற்றுப் பேசினார்.

இந்தப் புத்தகத்திருவிழாவில் அறிவியல், ஆன்மிகம், இலக்கியம், வரலாறு, ஜோதிடம், அரசியல், தன்னம்பிக்கை, மருத்துவம், சமையல், போட்டித் தேர்வுகள் என பல்வேறு தலைப்புகளில் ஏராளமான புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்தப் புத்தகத் திருவிழா வரும் 24ஆம் தேதிவரை நடைபெறும். எல்லா புத்தகங்களுக்கும் 10 சதவிகித சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Post a Comment

புதியது பழையவை

Sports News