பாளையங்கோட்டை சதக்கத்துல்லா கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் மார்ச் 23ம் தேதி நடைபெறுகிறது.

பாளையங்கோட்டை சதக்கத்துல்லா கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்
மார்ச் 23ம் தேதி நடைபெறுகிறது.

 

பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரியில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் மார்ச் 23ஆம் தேதி (2019) நடைபெற உள்ளது. இந்தத் தகவலை கல்லூரி முதல்வர் டாக்டர்.மு.முகமது சாதிக் தெரிவித்தார். 

 

பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரி வேலைவாய்ப்பு வழிகாட்டி மற்றும் பயிற்சி நிறுவனம், திருநெல்வேலி புறநகர் ரோட்டரி சங்கம், பொங்கு வெஞ்சர்ஸ் ஆகிய மூன்று அமைப்புகளும் இணைந்து கல்லூரியில் இந்த வேலைவாய்ப்பு முகாமை நடத்துகிறது. காலை 9 மணிமுதல் 4 மணிவரை நடைபெறும் இந்த முகாமில் எம்.இ., எம்.டெக்., எம்.ஏ., எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.எஸ்சி., எம்.காம்., பி.இ., பி.டெக்., பி.ஏ., பி.எஸ்.சி., பி.பி.ஏ., பி.காம்., ஹோட்டல் மேனேஜ்மெண்ட் ஆகியவற்றில் பட்டம் பெற்றவர்கள் கலந்துகொள்ளலாம். ஐ.டி.ஐ. டிப்ளமோ பெற்றவர்களும் மற்றும் இறுதியாண்டு பயிலும் மாணவ-மாணவிகளும் கலந்துகொள்ளலாம்.

முகாமில் கலந்துகொள்ள பதிவுக்கட்டணம் கிடையாது.

முகாமில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் www.vetan.in என்னும் இணையதளத்தில் தங்கள் பெயரை முன்பதிவு செய்துகொள்ள வேண்டும் பட்டதாரிகள் தங்கள் பயோ-டேட்டாவின் 10 பிரதிகள், 10 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ கொண்டுவர வேண்டும்.

40க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் இந்த முகாமில் கலந்துகொள்கின்றன. தகுதியான பட்டதாரிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு பணி வழங்கப்படும்.

இந்த வேலைவாய்ப்பு முகாமின்போது வேலைவாய்ப்பு வழிகாட்டி பயிலரங்கமும் நடைபெற உள்ளது. பொங்கு வெஞ்சர்ஸ் நிறுவனர் டாக்டர்.வினோத் வேலை தருபவராக எவ்வாறு மாறுவது? என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றுகிறார்.

ஈ-கொலிக் மென்பொருள் நிறுவனத்தின் திரு.சுஜின், ஹோட்டேலியர்ஸ் டாக் நிறுவனம், சி.ஐ.ஐ. நிறுவனம், மகளிர் தொழில்முனைவோர் அமைப்பு ஆகியவை இணைந்து இந்த முகாமை நடத்துகின்றன.

மேற்கண்ட தகவலை சதக்கத்துல்லா அப்பா கல்லூரி முதல்வர் டாக்டர்.முகமது சாதிக் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அப்போது பொங்கு வெஞ்சர்ஸ் இணை நிறுவனர் பா.பிரீத்தி, வேலைவாய்ப்பு துறை ஒருங்கிணைப்பாளர் டாக்டர்.ஜாகீர் உசேன், நிதிக்காப்பாளர் திரு.ஹாமில், தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் டாக்டர்.சௌந்திர மகாதேவன், ரோட்டரி சங்கத் தலைவர் திரு.வடிவேல், செயலாளர் திரு.ஜெய்லானி ஆகியோர் உடன் இருந்தனர்.

Post a Comment

புதியது பழையவை

Sports News