உலகத் தாய்மொழிநாள் - தேசியப் பயிலரங்கம்

உலகத் தாய்மொழிநாள் - தேசியப் பயிலரங்கம்

தேனித் தமிழ்ச் சங்கம், தேனி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும்  மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையுடன் இணைந்து ‘இணையத்தில் தமிழ்’ எனும் தலைப்பிலான தேசியப் பயிலரங்கத்தைத் தேனி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடத்தியது. உலகத் தாய்மொழி நாளை முன்னிட்டு நடத்தப்பெற்ற இப்பயிலரங்க நிகழ்விற்குக் கல்லூரித் தலைவர் செ.ல.ஜவஹர்லால் அவர்கள் தலைமை வகித்தார். கல்லூரிச் செயலாளர் ஜா.ஜ.கலைவாணி அவர்களும், தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் சு.சி.பொன்முடி அவர்களும் முன்னிலை வகித்தனர். தேனித் தமிழ்ச் சங்கத்தின் பொருளாளர் கவிஞர் ம.கவிக்கருப்பையா, துணைச் செயலாளர் அ.முகமது பாட்சா, பெ.பிரேம்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். 

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் உள்தர உத்தரவாத மையத்தின் இயக்குநர் முனைவர் க.பாலகிருஷ்ணன் அவர்கள் பயிலரங்கத்தைத் தொடங்கி வைத்துச் சிறப்புரையாற்றினார். திருச்சி, இணையத் தமிழ் வளர்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் தி.நெடுஞ்செழியன் அவர்கள், ‘தமிழ் எழுத்துருக்கள்’ எனும் தலைப்பிலும், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் துரை.மணிகண்டன் அவர்கள், ‘தமிழ் வலைப்பூக்கள்’ எனும் தலைப்பிலும், தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் மு.சுப்பிரமணி அவர்கள், ‘தமிழ் மின்னிதழ்கள்’ எனும் தலைப்பிலும், காந்திகிராமப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் சி.சிதம்பரம் அவர்கள், ‘தமிழ் மின்னூல்கள்’ எனும் தலைப்பிலும் பயிற்சியளித்தனர். 



பயிலரங்கில் பங்கேற்ற மாணவர்களுக்கு, மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழியல் துறைத் தலைவர் முனைவர் போ.சத்தியமூர்த்தி அவர்கள் சான்றிதழ்களை வழங்கிச் சிறப்புரையாற்றினார். முன்னதாகக் கல்லூரித் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர்.நாகேந்திரன் வரவேற்றார். முடிவில் கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர் மு.ரேணுகாதேவி நன்றியுரையாற்றினார். 

(ஒளிப்படம் எடுத்த கம்பம் பாண்டி அவர்களுக்கு நன்றி)

Post a Comment

புதியது பழையவை

Sports News