பள்ளி விழாவில் நெல்லை கவிநேசன் மற்றும் சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் திரு.பொன்னீலன்

பள்ளி விழாவில் நெல்லை கவிநேசன் 
மற்றும் 
சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் திரு.பொன்னீலன்லிங்கம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி வெள்ளிவிழா கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி லிங்கம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியின் வெள்ளிவிழா 23.03.2019 சனிக்கிழமை மாலை 5.00 மணிக்கு பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. 

விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக வெள்ளிவிழாவின் மலர் வெளியீட்டு விழாவும் நடைபெற்றது. 


இந்த விழாவுக்கு வடக்கன்குளம் ராஜாஸ் கல்வி நிறுவனங்களின் இயக்குநர் டாக்டர்.N.அழகேசன் தலைமை வகித்தார். திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி வணிக நிர்வாகயில் தலைவர் டாக்டர்.S.நாராயணராஜன் (நெல்லை கவிநேசன்) வெள்ளி விழா மலரை வெளியிட்டார். சாகித்திய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் திருமிகு.S.பொன்னீலன் அவர்கள் வெள்ளி விழா மலரின் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார். ஆசிரியரை செல்வி.N.தன்சியா பரிசுகள் வழங்கினார். இந்த விழாவில் பள்ளியின் நிறுவனர் திரு.C.தங்காசபாபதி வரவேற்புரை நிகழ்த்தினார். பள்ளித் தலைமை ஆசிரியை ஆண்டறிக்கை வாசித்தார். பள்ளியின் ஆலோசகர் வழக்கறிஞர் R.T.ரமேஷ்குமார் வாழ்த்துரை வழங்கினார். தாளாளர் B.வசந்தி ரமேஷ்குமார், பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் திரு.M.ராஜப்பா, முதல்வர் திரு.S.வைரவநாதன் ஆகியோர் இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தார்கள். 
Post a Comment

புதியது பழையவை

Sports News