நெல்லை கவிநேசனின் நெருங்கிய நண்பர் டாக்டர்.புலவர் சங்கரலிங்கத்துக்கு பணிநிறைவு பாராட்டு விழா

தமிழுக்கு ஓய்வில்லை...நெல்லை கவிநேசனின் நெருங்கிய நண்பர்
டாக்டர்.புலவர் சங்கரலிங்கம் தனது ஆசிரியர் பணி நிறைவு பெறுவதையட்டி நடந்த பாராட்டு விழா

 
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராக பணிபுரிந்துவந்த புலவர் டாக்டர்.வை.சங்கரலிங்கம் மற்றும் தாவரவியல் ஆசிரியர் திருமதி.செந்தமிழ்செல்வி பணி ஓய்வு பெறுவதையட்டி பாராட்டு விழா பள்ளி திருவள்ளுவர் அரங்கத்தில் நடந்தது.

இந்த விழாவிற்கு தலைமை ஆசிரியர் திருமதி.கலைச்செல்வி தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திரு.ராமானுஜம், பள்ளி கல்வி வளர்ச்சி குழுத்தலைவர் திரு.சர்வோதயா சுந்தரராஜன், செயற்குழு உறுப்பினர் திரு.ரங்கசாமி, திரு.ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழாசிரியர் திருமதி.கனிதா வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் திருமதி.அமுதா, முன்னாள் மாவட்ட கல்வி அலுவலர்கள் திரு.ராஜேந்திரன், திருமதி.விஜயலெட்சுமி, தலைமை ஆசிரியர் திரு.வெள்ளைப்பாண்டி, திரு.அருள்ராஜ், முன்னாள் செந்தமிழ் கல்லூரி மாணவர் சங்கத்தலைவர் திரு.இளங்கோ, பேராசிரியர்கள் பூங்கோதை, சாந்திதேவி, லெட்சுமி, திருவள்ளுவர் இலக்கிய மன்ற தலைவர் திரு.தனபாலன், செயலாளர் திரு.நவநீத கிருஷ்ணன், பொருளாளர் திரு.சந்திரசேகரன், ஓய்வுபெற்ற துணை சூப்பிரண்டு திரு.ராமநாதன், மனவளக்கலை மன்ற பேராசிரியர் திரு.மணவாளன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

முடிவில் புலவர் டாக்டர்.வை.சங்கரலிங்கம் ஏற்புரையாற்றினார். இந்நிகழ்வில் அனைத்து மாணவிகளுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. தமிழாசிரியர் பாரதி நன்றி கூறினார்.

Post a Comment

புதியது பழையவை

Sports News