ஆதித்தனார் கல்லூரி வணிக நிர்வாகவியல் துறை மாணவர்கள் சாதனை

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில்
ஆதித்தனார் கல்லூரிக்கு முதலிடம்

வணிக நிர்வாகவியல் துறை மாணவர்கள் சாதனை
   
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற பல்வேறு கலை போட்டிகளில் சமீபத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டிகளில் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி வணிக நிர்வாகவியல் துறை மாணவர்கள் கலந்துகொண்டு பல்கலைக்கழக அளவில் முதல் இடம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
 
ORIFLAMME 2019

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வணிக நிர்வாகவியல் துறை ஆண்டுதோறும் ORIFLAMME என்னும் போட்டிகளை நடத்திவருகிறது.

இந்த கல்வியாண்டில் மார்ச் 1ஆம் தேதி நடைபெற்ற
ORIFLAMME 2019 என்னும் போட்டிகளில் ஆதித்தனார் கல்லூரி வணிக நிர்வாகவியல் துறை மாணவர்கள் பங்கு பெற்றனர். பல்கலைக்கழக அளவில் பல்வேறு கல்லூரிகள் பங்கேற்ற இப்போட்டியில் ஆதித்தனார் கல்லூரி மாணவர்கள் அதிக புள்ளிகள் பெற்று முதல் இடத்தைப் பெற்றனர்.

பல்கலைக்கழக வணிக நிர்வாகவியல் துறை பேராசிரியர்கள்  டாக்டர்.எஸ்.மாதவன் மற்றும் டாக்டர்.பி.ரவி ஆகியோர் தலைமையேற்று நடத்திய இப்போட்டி பரிசளிப்பு நிகழ்ச்சியில் மாணவர்கள் பரிசுக் கோப்பைகளைப் பெற்றுக்கொண்டனர்.
       
பாராட்டு

போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவர்களை கல்லூரி முதல்வர் டாக்டர்.து.சி.மகேந்திரன்இ கல்லூரி செயலர் டாக்டர்.பெ.சுப்பிரமணியம், வணிக நிர்வாகவியல்துறைத் தலைவர் டாக்டர்.சௌ.நாராயணராஜன், பேராசிரியர்கள் டாக்டர்.அ.அந்தோனி சகாய சித்ரா, ஏ.தர்ம பெருமாள், டாக்டர்.எம்.ஆர்.கார்த்திகேயன், டி.செல்வக்குமார் மற்றும் கண்காணிப்பாளர் ஆர்.ராஜன் ஆதித்தன் ஆகியோர் பாராட்டினார்கள்.

Post a Comment

புதியது பழையவை

Sports News