திருநெல்வேலி-தூத்துக்குடி மாவட்டங்களில் “வெடல பசங்க”

திருநெல்வேலி-தூத்துக்குடி மாவட்டங்களில் “வெடல பசங்க”

பிரபல திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான "செந்தூரன்  சினி ஆர்ட்ஸ்" புத்தம் புதிய திரைப்படத்தை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. திருநெல்வேவி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் மட்டுமே இந்தப் புதிய திரைப்பபத்தின் படபிடிப்பை நடத்தவும் இயக்குனர் திரு.தாமரை செந்தூர்பாண்டி திட்டமிட்டுள்ளார்.

புதிய திரைப்படத்திற்கு "வெடல பசங்க" என்று வித்தியாசமாக பெயர் சூட்டப்பட்டுள்ளது. கிராமத்து நிகழ்வுகளை மையமாகக்கொண்ட வித்தியாசமான  கதையம்சத்தோடு இந்தத் திரைப்படம் உருவாக்கப்படுகிறது.
“வெடல பசங்க” படத்தின்  பாடல் பதிவும் , பூஜையும்  13/6/2019 அன்று காலை சென்னையிலுள்ள ஸ்ரீகாந்த்  தேவா பாடல் பதிவு அரங்கத்தில் நடைபெற்றது. படத்தின் இயக்குனர் திரு.தாமரை செந்தூர்பாண்டி அனைவரையும் வரவேற்றார். பிரபல இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா முன்னிலையில் முதல் பாடல் பதிவு நடைபெற்றது.
 

பாடலை முழுவதுமாகக் கேட்டபின்பு “இந்தப் படம் நிச்சயம் வெற்றி பெறும்” என்று வாழ்த்தினார் ஸ்ரீகாந்த். வழக்கறிஞர் சங்கத்  தலைவர் திரு.சிவமுருகானந்தம், பேராசிரியை  திருமதி.கல்பனா, சட்டக்கல்லூரி பேராசிரியர் திரு.தங்கசாமி, திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி  வணிக நிர்வாகவியல் துறைத்தலைவரும், பிரபல எழுத்தாளருமான திரு.நெல்லை கவிநேசன் போன்ற பிரபலங்கள் பலர்  கலந்துகொண்டு தொடக்கவிழாவை சிறப்பித்தார்கள்.
 

விழாவிற்கான ஏற்பாடுகளை மூத்த  மக்கள் தொடர்பாளர்  திரு.நெல்லை சுந்தரராஜன் சிறப்பாக செய்திருந்தார். இசையமைப்பாளர் திரு.பிரணவ் நன்றி தெரிவித்தார்.
 

இயக்குனர் இமயம் திரு.பாரதிராஜா, பிரபல நடிகை சீதா பார்த்திபன் ஆகியோரும் “வெடல பசங்க” படத்தில் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.


Post a Comment

புதியது பழையவை

Sports News