தினத்தந்தி-ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ். அகாடமி நடத்திய வழிகாட்டுதல் நிகழ்ச்சி

தினத்தந்தி-ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ். அகாடமி நடத்திய வழிகாட்டுதல் நிகழ்ச்சி

தினத்தந்தி மற்றும் ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ். அகாடமி இணைந்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுகளுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி மதுரை சமூக அறிவியல் கல்லூரியில் நடந்தது.
இந்த நிகழ்ச்சி அரசு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களுக்கு மிகவும் உதவும் வகையில் அமைந்தது. நிகழ்ச்சியில் துரோணாஸ் நாலேட்ஜ் நிறுவன இயக்குநர் திரு.இரா.ராமசுப்பிரமணியன் அவர்கள் வரவேற்றுப் பேசினார்.

“கல்விப்பணியில் தினத்தந்தி” என்ற தலைப்பில் தினத்தந்தி பொது மேலாளர் (புரமோசன்ஸ்) திரு.ஆர்.தனஞ்செயன் அவர்கள் உரையாற்றினார்.


டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்கான பயிற்சி குறித்து ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ். அகாடமி இயக்குனர் திரு.வீரபாபு அவர்கள் பேசினார். தமிழ்நாடு போலீஸ் முன்னாள் டி.ஜி.பி.யும், அரசு பணியாளர் தேர்வாணைய முன்னாள் தலைவருமான திரு.ஆர்.நட்ராஜ் எம்.எல்.ஏ. அவர்கள் தலைமை தாங்கிப் பேசினார்.


இந்த நிகழ்ச்சியில் திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறைத்தலைவர் டாக்டர்.எஸ்.நாராயணராஜன் (நெல்லை கவிநேசன்) “போட்டித் தேர்வுகளும், வேலைவாய்ப்பும்” என்னும் தலைப்பில் பேசினார்.

பேராசிரியர் திரு.எஸ்.அனந்த நாராயணன் அவர்கள் வாழ்த்திப் பேசினார். பேராசிரியை ஆர்.காயத்ரி அவர்கள் தன்னம்பிக்கையுரை வழங்கினார்கள்.

பிரபல திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான திரு.மீனாட்சி சுந்தரம் அவர்கள் போட்டித்தேர்வு எழுத இருக்கும் போட்டியாளர்களை வாழ்த்தினார். முடிவில், தினத்தந்தி செய்தி ஆசிரியர் திரு.ராஜேஷ் அவர்கள் நன்றிகூற விழா நிறைவுபெற்றது. இந்த நிகழ்ச்சியை நகைச்சுவை நாவலர் கவிஞர்.ச.திருநாவுக்கரசு சிந்தனை விருந்தோடு தொகுத்து வழங்கினார்.



 
முன்னதாக, விழாவில் பொது அறிவு கேள்விகளுக்கு விடையளித்த போட்டியாளர்களுக்கு நெல்லை கவிநேசன் எழுதி தினத்தந்தி பதிப்பகம் வெளியிட்ட “Competitive Examinations and Job Opportunities" என்னும் புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது. பரிசுகளை தினத்தந்தி தலைமைப் பொதுமேலாளர் (புரமோசன்ஸ்) திரு.ஆர்.தனஞ்செயன் அவர்களும், பேராசிரியை ஆர்.காயத்ரி அவர்களும் வழங்கினார்கள்.
 
 

Post a Comment

புதியது பழையவை

Sports News