மனோ டெண்டல் கிளினிக் திறப்புவிழா

மனோ டெண்டல் கிளினிக் திறப்புவிழா

திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் தாலுகா, செட்டிகுளம் புறவழிச்சாலை கணேஷ் பியூவல்ஸ் அருகில் கடந்த 13.09.2019 அன்று வெள்ளிக்கிழமை மனோ டெண்டல் கிளினிக் திறப்புவிழா நடைபெற்றது. 

பலவித நவீன அம்சங்களுடன்கூடிய பல் மருத்துவமனையை வேளாண்மை இணை இயக்குநர் (பணி நிறைவு) திரு.என்.எஸ்.கணேசன் பி.எஸ்.சி., (அக்ரி) அவர்கள் திறந்து வைத்தார்கள். சிகிச்சை அறையை சீதப்பால் சுந்தரவேல் புளூமெட்டல் உரிமையாளர் திரு.எஸ்.முத்துசேகர பாண்டியன் பி.ஏ., அவர்கள் திறந்து வைத்தார்கள். 

ஆய்வு மற்றும் சுத்திகரிப்பு அறையை திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி வணிக நிர்வாகவியல் துறைத்தலைவர் டாக்டர்.எஸ்.நாராயணராஜன் எம்.பி.ஏ., பி.எச்டி., என்ற நெல்லை கவிநேசன் திறந்து வைத்தார்.

இந்திய மருத்துவக் கழகத்தின் மாநில தலைவரும், கும்பகோணம் சுபம் மருத்துவமனையின் பிரபல மருத்துவருமான டாக்டர்.எஸ்.கனகசபாபதி எம்.எஸ்., லெவிஞ்சிபுரம் பாரத் மருத்துவமனை டாக்டர்.பி.தமிழரசு எம்.எஸ்., செட்டிகுளம் பணிநிறைவுப் பெற்ற தலைமையாசிரியர், நல்லாசிரியர் திரு.காண்டிபன் எம்.ஏ.,எம்.எட்., இராதாபுரம் பிரபல மருத்துவர் டாக்டர்.முருகேசன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள். 




முன்னதாக, மனோ பல் மருத்துவமனை பல் மருத்துவர் டாக்டர்.மனோபிரியா சௌந்தரபாண்டியன் பி.டி.எஸ்., மற்றும் கணேஷ் பியூவல்ஸ், கணேஷ் அக்ரோ புராடக்ட்ஸ், சௌந்தரபாண்டியனார் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி ஆகியவற்றின் உரிமையாளர் மற்றும் பங்குதாரர் திரு.என்.எஸ்.ஜி.சௌந்தரபாண்டியன் ஆகியோர் வரவேற்றார்கள். 

நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்களும், உறவினர்களும் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள்.

Post a Comment

புதியது பழையவை

Sports News