திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் சிறப்பு கருத்தரங்கம்

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் சிறப்பு கருத்தரங்கம்

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி வணிக நிர்வாகவியல் துறை சார்பில் சிறப்புக் கருத்தரங்கம் 03.10.2019 அன்று நடைபெற்றது. 

இக்கருத்தரங்கிற்கு திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி வணிக நிர்வாகவியல் துறைத்தலைவர் டாக்டர்.S.நாராயணராஜன் தலைமைத் தாங்கினார். பேராசிரியை டாக்டர்.A.அந்தோணி சகாய சித்ரா வரவேற்புரை நிகழ்த்தினார். பேராசிரியர் திரு.A.தர்மபெருமாள் வாழ்த்திப் பேசினார்.

கருத்தரங்கில் சென்னை குடும்ப ஆற்றுப்படுத்துதல் மையத்தின் தலைவர் திரு.எஸ்.ஜெ.ஜானகிராமன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அவர் பேசும்போது - “மாணவர்கள் கல்லூரியில் படிக்கின்ற காலத்திலேயே சின்னஞ்சிறு பிரச்சினைகளுக்கும் தானாகவே சிறந்த முடிவெடுக்கும் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும். மனதை ஒருமுகப்படுத்தி கல்லூரிப் படிப்பில் கவனம் செலுத்துவதோடு, தொடர்ந்து பல நல்ல திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். இதன்மூலம் வாழ்க்கையில் சிறப்பான வெற்றிகளைப் பெறலாம்” என்று மாணவர்களின் வாழ்க்கைக்கு உதவும் வகையில் சிறப்பாகப் பேசினார். 
இக்கருத்தரங்கில் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர். 

Post a Comment

புதியது பழையவை

Sports News