“மகிழ்ச்சியாக வாழ வேண்டுமா?” - நெல்லை கவிநேசன் பேச்சு

“மகிழ்ச்சியாக வாழ வேண்டுமா?” 
நெல்லை கவிநேசன் பேச்சு
தூத்துக்குடியில் 06.10.2019 அன்று நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் கலந்துகொண்ட நெல்லை கவிநேசன் “ஆனந்தம் இங்கே ஆரம்பம்” என்ற தலைப்பில் உரையாற்றினார். அவரோடு புகழ்பெற்ற எழுத்தாளரும், தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் துணை இயக்குநருமான டாக்டர்.சங்கர சரவணன், தமிழ்கடல் திரு.நெல்லை கண்ணன் ஆகியோர் உரையாற்றினார்கள். 

புத்தகத் திருவிழாவில் மகிழ்வான தருணங்கள்

1.தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் பாராட்டியபோது...


“நான் மாணவனாக இருந்தபோது நீங்கள் எழுதிய ‘நீங்களும் கலெக்டர் ஆகலாம்’ என்ற புத்தகத்தைப் படித்திருக்கிறேன். அருமையான புத்தகம். அந்த நூல் எனக்கு மிகவும் உதவியாக இருந்தது” என்று நெல்லை கவிநேசன் அவர்களை மனம்திறந்து பாராட்டினார் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் டாக்டர்.V.P.ஜெயசீலன் ஐ.ஏ.எஸ்.


2.2003ஆம் ஆண்டு நெல்லை கவிநேசன் எழுதி சென்னை குமரன் பதிப்பகம் வெளியிட்ட, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் டாக்டர்.V.P.ஜெயசீலன் ஐ.ஏ.எஸ். பாராட்டிய நூல் இதுதான்.3.புத்தகக் கண்காட்சியில் கலந்துகொண்ட நெல்லை கவிநேசன் தினத்தந்தி பதிப்பக அரங்கிற்கு சென்று மகிழ்ந்தபோது...4.நெல்லைகவிநேசன் எழுதி தினத்தந்தி பதிப்பகம் வெளியிட்ட நூல்களான- 1.“ஆளுமைத்திறன் - பாதைத் தெரியுது பார்!”, 2.“பழகிப் பார்ப்போம் வாருங்கள்”, 3.“சிகரம் தொடும் சிந்தனைகள்”, 4.“Competitive Examinations and Job Opportunities”, 5.“நீங்களும் தலைவர் ஆகலாம்” என்னும் நூல்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த காட்சி.


5.தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் திரு.V.P.ஜெயசீலன் IAS, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகர் திரு.சண்முக சுப்பிரமணி மற்றும் தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் துணை இயக்குநருமான டாக்டர்.சங்கர சரவணன் ஆகியோருடன் நெல்லை கவிநேசன்

5.திருச்செந்தூர் வட்டாட்சியர் (தாசில்தார்) திரு.ராஜ்குமார் அவர்களுடன் நெல்லை கவிநேசன்.


5.நெல்லை கவிநேசனுக்கு முத்துநகரில் முத்தான நினைவுப்பரிசு.

Post a Comment

புதியது பழையவை

Sports News