திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி பேராசிரியருக்கு விருதுகள்

திருச்செந்தூர்
 ஆதித்தனார் கல்லூரி பேராசிரியருக்கு விருதுகள்  நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் செயல்பட்டு வரும் இலக்கிய அமைப்பான கவியரசர் கலை தமிழ்ச் சங்கம் ஆண்டுதோறும் சிறந்த பேராசிரியர்களுக்கு விருது வழங்கி பாராட்டி வருகிறது. மேலும், பேராசிரியர்களுக்கு மாநில அளவில் கட்டுரைப் போட்டியை நடத்திவருகிறது. 
இதில், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி தமிழ்த்துறை தலைவர் டாக்டர். கதிரேசன் 2018 19 ஆண்டிற்கான "பேராசிரியர் ரத்னா" விருதையும் மாநில அளவிலான கட்டுரை போட்டியில் ஐந்தாம் இடத்தையும் பெற்றார். இதற்காக அவருக்கு கேடயம் பதக்கம் மற்றும் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது 
மேலும், அவருக்கு நாகலாபுரம் மனோ மாதிரி கல்லூரி இந்த கல்வி ஆண்டிற்கான சிறந்த பேராசிரியர் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட அதிகாரிக்கான விருதையும் வழங்கி பாராட்டியுள்ளது. 
இந்த விருதுகளை கல்லூரி முதல்வர் மகேந்திரன் செயலர் ஜெயக்குமார் ஆகியோரிடமிருந்து கதிரேசன் பெற்றுக்கொண்டார்.

விருது பெற்ற பேராசிரியர் கதிரேசனை கல்லூரி முதல்வர் மகேந்திரன் ஆதித்தனார் கல்வி    நிறுவன மேலாளர் வெங்கட் ராமராஜன் செயலர் ஜெயக்குமார் கல்லூரி அலுவலக கண்காணிப்பாளர் ஆதித்தன் உட்பட பலர் பாராட்டினார்கள்

Post a Comment

புதியது பழையவை

Sports News