திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதார பதி


திருச்செந்தூர் 
அய்யா வைகுண்டர் அவதார பதி
திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதார பதியில் திருக்கல்யாண வைபவம் நடந்தது. இதில் திரளாக பங்கேற்ற பக்தர்கள் சீர்வரிசை கொடுத்து வழிபட்டனர். திருச்செந்தூர் கடற்கரையில் உள்ள அய்யா வைகுண்டர் அவதார பதியில் திருஏடு வாசிப்பு திருவிழா கடந்த பதினொன்றாம் 13ஆம் தேதி முதல் துவங்கி தொடர்ந்து நடைபெற்றது.
 திருவிழா நாட்களில் தினமும் மாலை திருஏடு வாசிப்பு நடந்தது. திருவிழாவின் முக்கிய நாளில் அய்யா வைகுண்டருக்கும் சப்த கன்னிமார் களுக்கும் திருக்கல்யாண வைபவம் நடந்தது.

 இதில் திரளாக பங்கேற்ற பக்தர்கள் அய்யாவுக்கு சீர்வரிசை கொடுத்து வழிபட்டனர். பக்தர்கள் மகராஜன் ,ராஜன்,ஸ்ரீமதி பாலகிருஷ்ணன் திருக்கல்யாண திருஏடு வாசித்தனர்.

 விழாவில் அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் வள்ளியூர் தர்மர் ,செயலாளர் பொன்னுத்துரைபொருளாளர் ராமையா ,இணைத் தலைவர் ஐயா பழம் ,இணைச் செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், வரதராஜபெருமாள், செல்வின் ,விஜயகுமார், துணைச் செயலாளர் ராஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர் .விழாவில் 29-ஆம் தேதி மாலை பட்டாபிஷேக வைபவம் நடைபெறும் நடைபெற்றது

Post a Comment

புதியது பழையவை

Sports News