திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி பயிலரங்கம்

 திருச்செந்தூர் 
ஆதித்தனார் கல்லூரியில்
 தீயணைப்பு மற்றும் மீட்பு பணி பயிலரங்கம்திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி பயிலரங்கம் நடைபெற்றது.

ஆதித்தனார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த பயிலரங்கத்திற்கு தலைமையேற்றார் ,வணிக நிர்வாக இயல் துறை தலைவரும் பேராசிரியருமான டாக்டர். எஸ். நாராயண ராஜன்.

நாட்டு நலப்பணித்திட்ட ( அணி எண் 45)திட்ட அலுவலர் டாக்டர். மருதையா பாண்டியன் அனைவரையும் வரவேற்றார் .

ஆதித்தனார் கல்லூரி செயலர். டாக்டர். எஸ் .ஜெயக்குமார் வாழ்த்துரை வழங்கினார்.
சிறப்பு விருந்தினராக ,மாவட்ட மற்றும் மீட்பு பணி அலுவலராக பணிபுரிந்து ஓய்வு பணி நிறைவுபெற்ற, திரு .எஸ். ஆறுமுகம் அவர்கள் கலந்து கொண்டார்.

தீயணைப்பு துறை பற்றியும் ,எவ்வாறு இயற்கை பேரிடர்களை சந்திக்க வேண்டும்? என்பது பற்றியும், தீயணைப்பு வழிமுறைகள் பற்றியும் விரிவாக கருத்துரை வழங்கினார் சிறப்பு விருந்தினர் .
நிறைவாக திட்ட திட்ட அலுவலர் (அணி எண் 43 )டாக்டர். அபுல் கலாம் ஆசாத் நன்றி வழங்க பயிலரங்கம் இனிதே நிறைவேறியது

Post a Comment

புதியது பழையவை

Sports News