ஓவிய வல்லுநர் நாணா எழுதும் தொடர்-7







உதவிச் சந்திரன்......ஐ.ஏ.எஸ்!.

2004 …கிறிஸ்துமஸ் அல்லது என் பிறந்தநாளுக்கு மறுநாள்

சுனாமி ஞாயிறு!

….அன்று காலை கடற்கரையில் விளையாடிய எங்கள் டென்னிகாய்ட் டீம் ஜஸ்ட் எஸ்கேப்…!

இல்லேன்னா.. நாணா ஷாம்… மெரினாவுக்கு…. மெரினாவுலே..ஊ..ஊ!



எப்பவும் ஞாயிறு மட்டும் சற்று அதிக நேரம்  மெரினாவில் டென்னிகாய்ட் விளையாடும் எங்கள் அணி… சுனாமிக்கு சில நிமிடங்கள் இருக்க எப்படியோ சகுணம் அறிஞ்சது போல... சீக்கிரம் கெளம்பிட்டோம்!


8-15க்கு சென்னைக்குள் கடல் புகுந்தது என்னும் சன் டிவி ஒற்றை வரி ஃப்ளாஷ் நியூஸ்...ஸ்க்ரோலில்… அடுத்த நொடியில்...மொத்த நெட்வொர்க்க்கும் ஸ்தம்பிக்க..அந்த வாரம் முழுக்க மீட்புப்பணியில் பரபரப்பாக அவரது பெயர்கேள்விப்பட்டேன்!
அதற்கு முன் பல சமயங்களில் செய்தித்தாள்களில் மாவட்டக்  கலெக்டராக அவர் பெயர் பரிச்சயம்
பின்னர் ஒரு நாளில் நேரடியாக தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு சந்திப்பில் மைக்கைப் பிடித்து .. அவருடைய கைபேசி எண் தந்து தமிழ் மொழியின் வளர்ச்சி சம்பந்தமான பணிகளில் எதிர்வரும் இடையூறுகளைக் களைய 24x7 எப்ப வேணாலும் என்னை அழையுங்கள் என்ற போதுஎன் புருவம் மேலிட..திரு. உதயசந்திரன் அவர்களின் எளிய தோற்றத்தையும்..  அவரது பணி நேரமும்மொழி நேயமும் கண்டு..வியப்பு.
இணையக் கல்விக்கழகத்தில் (2016 ) அவருக்குக் கீழ் அடியில் …(#அப்போது கீழடி கண்டுபிடிக்கப்படாத காலம்! ) மின்நூலாக்கம்பிழைதிருத்திஎனப் பல குழுக்களில் இதனை இவன்கண் விடல் என்னும் வரிசையில் எழுத்துருவாக்கம் என்பதில்- நானும் இருந்தேன்.



என் முன்னே ஒரு மிகப்பெரிய மென்பொருள் பிரச்சனை… அப்போது அங்கு ஒருங்கிணப்பு..பொறுப்பில்  இருந்த திருமதி தனலெட்சுமி கிரி அவர்களின் வழிகாட்டுதலுடன்.. சென்ன்ன்று  தயங்கியபடியே என் பிரச்சனையைச் சொன்னேன்! ...
இவ்ளவு தானாஎன சுற்றில் அடித்த பந்து போல அவர் தந்த தீர்வில் துள்ளி வெளியில் வந்தேன். யெஸ் இட்ஸ் gone!…போயே போச்சி!
இந்த இடத்தில் ஒரு ரிவர்ர்ர்ஸ்ஸ் கியர்….90 களில் ஒரு சமயம்
... சுஜாதா சார் அழைத்தார்.. ’உனக்கான ஒருவரைப் போய் பார்’ என்று மின்னம்பலம் அலுவலகத்துக்குள் பரபரப்பாக இயங்கிகொண்டிருந்த ஒரு நாளில் திருமுத்துநெடுமாறன் அவர்களை அறிமுகம் செய்து உதவினார்அந்த நாள் முதல் இந்த நாள் வரை..… வடிவமைப்பும் எழுத்துருவும் போல் இன்றும் என்றும் எளிய நட்புடன்தொடர் சுகம்!



முத்துநெடுமாறன் நிகழ்ச்சி என்றால் நாணாஅதற்காக பசை காய்ச்சி போஸ்டரே அடிச்சி ஒட்டுவார் என்னை அன்பாக ஓட்டுவார்வெங்கட்! Venkatarangan Thirumalai


 (யூனிகோட் Font generation) ...  க்ஷ்..க்ஷ ஸூஎன்னும் எழுத்துரு கோடிங் சிக்கல்மற்றும் ரூபாய் க்கான symbol அதற்கான கீமேப் பொஸிஷன்… Unicode at U+0303 ◌̃ COMBINING TILDE and U+007E ~ TILDE (as a spacing character) என இனம்புரியாத  இடர் வரும் போதெல்லாம் எந்த நாட்டிலிருந்தாலும் இரவோ பகலோ அடுத்த நிமிடமே கைதூக்கி காட்சி தரும் தமிழ் எழுத்துரு பிதாமகர் திரு. முத்து நெடுமாறன் கூடவே  வழுநீக்கியார்’ என்னும் காரணப்பெயர் கொண்ட திரு. NHM நாகராஜன்.  எங்களின் இந்த நட்பு என்னும் எழுத்துருவில் ஃபுல் ஸ்டாப் தட்டினால் அது ஆச்சரிக்குறியாய்த்தான் விழும்சுகமான நட்பு!
7 *********


தமிழ் சார்ந்த பணிகளுக்கு உதவி எனில் 24x7 அணுகலாம்..எனச் சொல்லும் உதய் சார் போன்ற எந்த ஒரு அதிகார மையத்தையும் இதற்கு முன் நான் கண்டதில்லை. அதே மேடையில் நானும் எழுத்துரு பற்றிய ஒரு அமர்வில் கலந்து கொண்டதும்அப்போது  திரு. மணி மணிவண்ணன் அவருடன் இணைந்து தற்கால வடிவமைப்பு மற்றும் அச்சுப் பணியில் தமிழ் எழுத்துருவின் வளர்ச்சி பற்றிய தொகுப்புரை வழங்கியதில் என் பெயரின் இரண்டெழுத்து மட்டும் அவர் நினைவில். ( எப்படியோ என்னை ட்ரேஸ் செய்ய உதவிய இராசித்தானை சார்திருமதிதனலெட்சுமி இருவரின் பெயரிலும் எழுத்துரு உருவாக்கும் அளவுக்கு நன்றியுடன்.) 



விளைவு: 247 எழுத்துக்களை  அலங்கரிக்கும் தமிழின் பெருமைமிகு அரிய பணியில் என்னை ஈடுபடுத்திக்கொள்ள ஒரு வாய்ப்பாக அமைந்தது.
அரசு ஆணைகள் இனி (நான் வடிவமைத்தமருதம் எழுத்துருவிலே தான் வரவேண்டும் என ஒரு அரசாணைசொல்லியது…(கவர்மெண்ட் ஜாப் கிடைச்சது போலும் சந்தோஷம்!)
9……


இப்போதைய கீழடிக்கு முன் அவர் காலடிபட்டது தமிழ்நாடு பாடநூல் நிறுவனம்.புதிய ஏற்பாட்டில் உருவான பாடநூலில் எனது உருவாக்கத்தில்  தமிழ் இணையக்கல்விகழகம் மூலம் வெளியான பாலை – முல்லை எழுத்துருக்களை உபயோகப்படுத்தப் போவதாக அவர் என்னிடம் சொன்ன செய்தி ஒரு சுவர் ஓவியனுக்குக் கிடைத்த ஓவர் சுகம்!

கைவைக்க முடியாத புதுக்கோட்டை பஸ் ஸ்டாண்ட் சுற்றுச் சுவரில் முகத்தை மூடிக்கொண்டு எழுதிய நான் எங்கேஅரசுப் பாடப்புத்தகம் அச்சிடப்பட்டுள்ள எழுத்துரு லெவல் எங்கே?…
படிப்பை மட்டும் நம்மகிட்ட இருந்து எடுத்துக்கவே முடியாது” என்னும்
தனுஷ் வைரல் வசனம் உண்மை … இனிவரும் தமிழ்ச் சமுதாயம் இந்த என் எழுத்துருக்களின் வாயிலாக படிக்கப்போவதை என் இடத்திலிருந்து ஒரு செகண்ட் நினைத்துப் பாருங்கள்….எனக்குப் புல்லரிப்பு ஏற்பட்டதைநம்புங்கன்னு கெஞ்ச வேண்டிய அவசியம் இல்லாமலே நம்புவீங்கஎன நம்புகிறேன்!





அப்போது ஏற்பட்ட ஆர்வமிகுதியில் கூகுளாண்டவர் தந்த அவரது ஒரு படத்தை வரைந்து எடுத்துக்கொண்டு அவரிடம் சென்றோம்.  நேரில் பார்ப்பதற்கும் ஓவியத்துக்கும் 6 வித்தியாசங்களுக்கு மேல் இருந்தது கண்டிக்கத்தக்க.. உண்மையே. அதுனால அதன்மேல்  இன்ஸ்டண்ட் இரு வரிக் கவிதையாய்
….இது நானா?
என்று அவர் எழுதிக் கையெழுத்திட்டபோது ஒரு ஓவியம் கவிதையானது!


அடுத்த மாதத்தில் அவரை சந்திக்க எண்ணுகையில்
மீண்டும் ஒரு மாறுதலுக்குட்பட்டு தொல்லியல் துறையில் பணி நடை!
கிடைத்ததுகீழடி
அவரது எண்ணம் போல் இன்று மாபெரும் சபைதனில் அவர் நடை!
எத்தனையோ பாதுகாப்புஅரசியல்மற்றும் நடைமுறைச் சிக்கல்கள் தாண்டி..
கீழடியில் நம் காலடி  வெச்ச மாதிரியான  வெர்ச்சுவல்” அனுபவத்தைசென்னையில் திருவையாறுசென்னையில் குற்றாலம் போல …’சென்னையில் கீழடி’ என்னும் கான்செப்ட் அபாரம் … (இந்தியா டுடே விட்டும் தினசரி தொடர்பில் கடந்த என்னுடன் 30 வருடங்களாகத் தொடரும் திரு.வாசு திருமூர்த்தியுடன்)..


இந்த நேரத்தில்  கீழடி அகழ்வாராய்ச்சியில்  முக்கியக் காரணகர்த்தாவாகத் திகழ்ந்த / திகழும்   திரு. அமர்நாத் அவர்களுக்கும் நன்றி சொல்லி…  அவருக்கும்  எண்ணிய எண்ணியாங்கு அமைத்திடும் வகையில்  உதயசந்திரன் அவர்களுக்குத்  துணைநிற்கும் ஊழியர்களுக்கும்தமிழ் மக்களின் சார்பில் நன்றி!



கீழடியின் மாதிரியையும் அதற்குள் பயணிக்கும் வெர்ச்சுவல்” அனுபவத்தை  படமெடுத்து உடனடியாக உங்கள் மெயில் ஐ டிக்கு அனுப்பும் அந்த இளைய சமுதாய இணைய  வல்லுர்களுக்கும்  இளகிய வணக்கம்!
அங்குகிடைத்த சல்லடை போலும் மூடி கொண்ட  சமையல் மண்பாத்திரங்கள்  மற்றும்  நீர் மேலாண்மை  உபகரணங்கள் உறை கிணறு அமைப்பு … திமில் கொண்ட காளை வளர்த்த தமிழ்ச் சமுதாயம் மூன்றாம் நூற்றாண்டுக்கு முன்பே பானை செய்பவரும் கல்வியறிவு பெற்றிருந்தமுன்தோன்றிய மூத்தகுடியின்  ஆபரணங்கள் ..
அதில் பொறிக்கப் பட்ட ஓவிய மற்றும் தமிழி எழுத்துக்களை இங்கே நம் கைக்கெட்டும் தூரத்தில் கொண்டு வந்து நிறுத்தப்பட்ட பிறகும் அதை நேரில் வந்து பார்க்காமலிருப்பது தமிழர்க்கு அழகல்ல!
மேலும் கீழடியின் பெருமையை 24 மொழிகளில் அறிக்கையாக தரமான தாளில் 50 ரூபாய் விலையில் கிடைக்கச் செய்திருப்பதுமத நல்லிணக்கம் போல இது மொழி நல்லிணக்கம்!  வேற்று மொழி நண்பர்களுக்கு தமிழ்ப்பெருமையின் பரவசத்தை பரிசளிக்கலாம்!

சென்ற வாரம் புத்தகக் கண்காட்சி ஆரம்பிப்பதற்கு முதல் நாள்மாலைஎதார்த்தமாக அவருடன் கிடைத்த சந்திப்பின் அந்த  சில நிமிடங்களில்.. அப்போது தான் 24 மொழிகளில் அச்சேறிய முதல் பிரதிகள் அவரது கரங்களில் தவழ….பிரசவம் ஆன குழந்தையைக் கண்ட மகிழ்வு எங்கள் எல்லோர் கைகளிலும் அந்தக் கீழடி அரங்கம் புத்தகங்கள்.
 பிளைவுட்களுக்குள்ளும்ஆணி உளி..சுத்தியல் கட்டைகளுக்குள் நின்றபடி ஒவ்வொரு சதுர அடிக்குள்ளும் சிதறாத அவரது கவனத்தை..நான்  சிதைக்க விரும்பாமல் நழுவினேன்!பபாஸி தலைவருடன் நிகழ்வு ஏற்பாடு குறித்து பேசும்போதிலும்
கையைக் காலை அசைத்துக்கொண்டே இருந்தார்.. படமெடுக்கும் என் அவஸ்தை புரியாமல்… அந்த சமயம் அவருக்குத் தெரியாமல் (nikkor 70-300) ’லாங் லென்ஸ் கிளிக் ..சைலன்ஸர் பொருத்திய ஆயுதம் போல… கி….ளி….க்கிளிக்கிளிக்!) 

மறுநாள் அதே நேரம் முதலமைச்சருடன்பாதுகாப்பு கெடுபிடிகளில் தூரத்தில் நான் மாட்டிக்கொண்டு…(விதி வலியது..!) மறுபடியும் லாங் லென்ஸ்..ரெண்டு கிளிக்ஸ்


மாண்புமிகு முதலமைச்சர் விசிட் முடிந்ததும் கிடைத்த ஆசுவாமான இடைப்பட்ட  நேரத்திலும் தந்தி டி.வி பேட்டிமாணவ ..வாசக அனபர்களுக்கு ஆட்டோகிராஃப்  என ஓய்ந்த பொழுதில்  உதயசந்திரன் அவர்களை வானத்து உதயசந்திரனோடு இணைத்து (அதையும் அவருக்குத் தெரியாமல் தான்) எடுத்தேன்காட்டினேன்!

அவருக்கு மகிழ்ச்சி…..இதெல்லா எப்போ எடுத்தீங்க நாணாஎன்னும் குரலில் அன்பு கலந்த குளிர்..
சந்திரன் என்றாலே குளிர்ச்சி தானேஅதிலும் மார்கழி மாத இரவும்… மரங்களும்… எழுத்தாளர் சுஜாதாவைக் கொண்டாடும்  மனசும் இணைந்தால்! சொல்லி மாளாது 


ஆகவே  இனிய பொங்கல் நல்வாழ்த்துகளை
இருகரம் கூப்பிய அகங்குளிர் வணக்கத்துடன்
                                                  அடுத்த தொடரில் வர்றேன் ….வெயிட் பண்ணுங்க!

Post a Comment

புதியது பழையவை

Sports News