கிராமத்து புதிர் கணக்கு

கிராமத்து புதிர் கணக்கு
 டாக்டர். கணபதி சுப்ரமணியன்



(எழுதி பார்க்காமல், மனதிலே கணக்கெழுதி விடை காணுகின்ற பழக்கமுள்ளவர்கள், இந்த புதிர் கணக்கை புரிந்துகொண்டு உடனே விடை கண்டு பிடிக்கலாம்.)

                ஒரு ஊர்ல ஒரு மனிதன் மூன்று தெய்வங்களை வழிபட போறான்.
அந்த மூன்று தெய்வங்களுக்கும் முன்னால ஒரு குளம் இருக்கு .அந்த குளம் ஒரு சிறப்புப் பொருந்தியது. அந்த குளத்துல எதை கொண்டு முங்கினாலும் அது இரண்டு மடங்காக ஆகும். 
       இதுல என்ன குறிப்பு- அந்த மனிதன் ஒரு எண்ணிக்கையுடைய மாலை கொண்டு வாரான்.
முதல் குளத்தில் மூழ்கி எழுந்து கொஞ்சம் மாலைகளை முதல் சாமிக்கு போடறான்.
             மீதி உள்ள மாலையைக் கொண்டு, இரண்டாவது குளத்தில் முங்கிக் இரண்டாவது குளத்திலுள்ள சாமிக்கு மாலை போட்டு, அதில் உள்ள மீதி மாலைகளை எடுத்து, மூன்றாவது குளத்தில் மூழ்கி, பின் மூன்றாவது குளத்திலுள்ள சாமிக்கு கையில இருக்கிற மாலை அனைத்தும் மூன்றாவது சாமிக்கு போட்டு விடுகிறான்.
    இப்போ 1 ,2 3, சாமிகள் உடைய மாலைகளும் ஒரே எண்ணிக்கை உடையதாக அமைந்திருக்கவேண்டும். அப்படினா, எத்தனை மாலை கொண்டு வந்திருப்பான்?.

இதுதான் கணக்கு
விடை
7 மாலை கொண்டு போவான். முதல் குளத்தில் முழ்கியவுடன் 14 ஆகும். முதல் சாமிக்கு 8 மாலை. மீதி 6 மாலையுடன் இரண்டாவது குளத்தில் முழ்கியவுடன் 12 ஆகும்.
2 சாமிக்கு 8 மாலை .மீதி 4 மாலை இருக்கும். அதை கொண்டு மூன்றாவது குளத்தில் மூழ்கியவுடன் 8 மாலையாக மாறும்.
3வது சாமிக்கு 8 மாலையை போட்டு விடுவான்.
 மூன்று சாமிக்கும் 8 மாலை. மீதி ஒன்றுமே இருக்காது


                                      ........................................................................

1 கருத்துகள்

கருத்துரையிடுக

புதியது பழையவை

Sports News