இப்படியும் பயன்படுமா வாட்ஸ்அப்?இப்படியும் பயன்படுமா வாட்ஸ்அப்?

- பாளை ப.இசக்கிராஜன்

என் நண்பரும் ,எல்.ஐ.சி மைய அலுவலகத்தின் வணிகத்துறை செயலாளருமான திரு K.முரளி "கோதாவரி "என்ற வாட்சாப் குழுவை திறம்பட நிர்வகித்து வருகிறார்.

இந்த கொரோனா காலத்தில் வீட்டுற்குள்ளேயே அடைபட்டுக் கிடக்கும் உறுப்பினர்களை சுறுசுறுப்பாக வைத்திருக்க நாள்தோறும் பல போட்டிகளை அறிவித்து வருகிறார். 

கலைந்து கிடக்கும் எழுத்துக்களை சரியாக சேர்த்து சொற்களை கண்டுபிடிப்பது, பல படங்களை வரிசைப்படுத்தி ஒளிந்திருக்கும் ஊர்ப்பெயர்களை கண்டுபிடிப்பது, பொது அறிவுக் கேள்விகளை அறிவித்து விடைகளை வரவழைப்பது என்று பல வகைப் போட்டிகள். 

முதன் முதலாக சேர்ந்த பணியில், முதலிரண்டு நாட்களின் அனுபவங்களை எழுதச் சொல்லி, அனைவரையும் ஆர்வமுடன் பங்கெடுக்க வைத்து உறுப்பினர்களை உற்சாகப் படுத்தினார். 

நேற்று காலை, உறுப்பினர்களின் திருமணப் படங்களை கேட்டு வாங்கி, ஒரு வீடியோ ஆல்பத்தினை தயாரிக்கும் பொறுப்பை, தென் மத்திய மண்டல தகவல் தொழில் நுட்பத்துறை நிர்வாக அலுவலர்திரு. சூர்ய வரதனிடம் வழங்கினார். 

திரு.சூர்ய வரதனும் தனக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்து கொடுத்துள்ளார். 

அவர் தயாரித்த வீடியோ ஆல்பம் பழைய நினைவுகளை தூண்டி விட்டுள்ளது. நண்பர் திரு .முரளி அவர்களுக்கு பாராட்டுக்கள்...

ந்த வீடியோ ஆல்பம் YouTube லும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. Post a Comment

புதியது பழையவை

Sports News