மெஞ்ஞானபுரம் பிரதிஷ்டை பண்டிகை


மெஞ்ஞானபுரம் 
பரிசுத்த பவுலின் ஆலய
 179 ஆவது பிரதிஷ்டை பண்டிகை. 
அசன விழா. 

    மெஞ்ஞானபுரம் பரிசுத்த பவுலின் ஆலய பிரதிஷ்டை பண்டிகை அசன விழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 
 

    இந்த விழாவில் ,கிறிஸ்தவ இன்னிசை நிகழ்ச்சிகள் ,நற்செய்தி கூட்டங்கள் ,சிறப்பு பட்டிமன்றம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன .



விழாவின் சிகர நிகழ்ச்சியான அசன வைபவம் சிறப்பாக நடந்தது. 29.01.2026 அன்று அதிகாலையில் பிரதிஷ்டை பண்டிகை ஆராதனையும், பரிசுத்த திரு விருந்து ஆராதனையும் நடந்தது. 




    கனம் ஜான் தாமஸ் ஐயரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தப்பட்டது .
 


காலை 6 .15 மணிக்கு உலை ஏற்றும் வைபவம் நடந்தது.மாலை 4.30 மணிக்கு அசன வைபவம் நடைபெற்றது.    

                 

    இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு அசன விருந்தை சிறப்பித்தனர்.  இரவில் வான வேடிக்கை நடந்தது. 

    இந்த விழா ஏற்பாடுகளை மெஞ்ஞானபுரம் பொதுமகமைச் சங்கத் தலைவர் திரு.ஜெயபோஸ், உப தலைவர் திரு.செல்வின் தாமஸ் ,செயலாளர் திரு. நவமணி ராபர்ட் ,பொருளாளர் திரு. சொர்ணராஜ் ,இணைச்செயலாளர் திரு. தேவசகாயம் மோசஸ் ,சபை ஊழியர் திரு. எல்சின் தங்கதுரை, ஓய்வு பெற்ற திருப்பணி விடையாளர்கள் திரு.எட்வின் ஜெபராஜ் , திரு.டேனியல் எட்வின் மற்றும் சபை மக்கள் சிறப்பாக செய்தனர்.
பல்லாயிரக்கணக்கான மக்களின் பாராட்டைப் பெற்ற ஆசன விழா ஆண்டுதோறும் நடைபெறுவது குறிப்பிடத்தக்கதாகும்.

                                                     ------------------------------------




Post a Comment

புதியது பழையவை