பி.ஏ. எல்.எல்.பி., (B.A.L.L.B)-2021- உள்ளிட்ட சட்டப்படிப்பில் சேர தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பின் இணையதளத்தில் வரும் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகம் (Tamil Nadu National Law University )அறிவித்தள்ளது.
இதுகுறித்து திருச்சியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகம் சார்பில் தெரிவித்ததாவது, இந்தாண்டுக்கான பி.ஏ. எல்.எல்.பி, பி.காம். எல்.எல்.பி., எல்.எல்.எம் சட்டப்படிப்புகளுக்கு வரும் ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பின் www.consortiumofnlus.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கான பொது நுழைவுத்தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
விண்ணப்பிக்கும் மாணவர்கள், முதல் தலைமுறைப் பட்டதாரிகளுக்கான உதவித்தொகை, மேலும் ஆதிதிராவிடர் நலத்துறையின் கல்வி உதவித் தொகை பெற விரும்பினால் www.tnnlu.ac.in இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் எனத் தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் தெரிவித்துள்ளார்.
கருத்துரையிடுக