கவிதைகளுக்கு "மொபைல் ஆப்"

 


கவிதைகளுக்கு "மொபைல் ஆப்" 



தனது கவிதைகளை மொபைல் ஆப் மூலம்  வெளியிட்டு வருகிறார் பிரபல கவிஞர்.இரா. ரவி அவர்கள் .

2003ஆம் ஆண்டே ஹைக்கூ கவிதைகளுக்கென இணையம் www.kavimalar.com தொடங்கி இன்றுவரை ஒருநாள் கூட இடைவெளி இன்றி தொடர்ந்து இயங்கி வருகின்றது. 

பல இலட்சம் வாசகர்கள் உலகம் முழுவதும் பார்த்து ரசித்து உள்ளனர். இணையத்தின் வெற்றியினைத் தொடர்ந்து புதிய கவிதை செயலி தொடங்கி உள்ளார்.

இன்றைய இளையதலைமுறையினர் அலைபேசியிலேயே கவிதை செயலியை ஒருமுறை டவுன்லோடு செய்து வைத்துக்கொண்டு விரும்பும் போது, நேரம் கிடைக்கும் போது, கவிதைகளை படித்து ரசித்து மகிழலாம். 



கவிஞர் இரா.இரவியின் ஹைக்கூ கவிதைகள், புதுக்கவிதைகள், நூல் மதிப்புரை, சிறு குறிப்பு, வெளியிட்ட நூல் விபரங்கள் அனைத்தும் செயலியில் உள்ளன.

காதல், உறவுகள், ஹைக்கூ, தலைவர், தத்துவம், காட்சிகூடம் மற்றவை என பிரிவுகளின்  கீழ் கவிஞர் இரா. இரவியின் கவிதைகள் முழுவதும் இடம்பெற்றுள்ளன. தினந்தோறும் கவிதைகள் எழுதிக்கொண்டே இருப்பவர் கவிஞர் இரா. இரவி. எழுத எழுத உடனடியாக செயலியில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

கவிதைக்கு பொருத்தமான படங்களுடன் செயலியில் இடம்பெற்றுள்ளதால் பார்க்க படிக்க மிக அழகாக உள்ளன. ஒருமுறை படித்தவர்கள் திரும்பத் திரும்ப வந்து படிக்கின்றனர். பல்வேறு தலைப்புகளில் கவிதைகள் உள்ளதால் பல்சுவை விருந்தாக உள்ளது. கவிதை ரசிகர்கள் அனைவரும் விரும்பி வாசிக்கும் செயலியாக புகழ்பெற்று வருகின்றது.

அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்ப தமிழை, கவிதையை முன்னெடுத்துச் செல்வதில்  கவிஞர் இரா. இரவி எப்போதும் மோனையைப் போல முன் நிற்கின்றார். இணையத்தால் உலகப்புகழ் பெற்றவர் தற்போது கவிதை செயலியின் மூலம் உலகப்புகழ் பெற்று வருகிறார்.



ஒருமுறை இந்த செயலியைப் படித்தவர்கள் இந்த செயலியின் வடிவமைப்புக் கண்டு அசந்து விடுகின்றனர். தங்களது நண்பர்களுக்கும் அவர்களாகவே செயலியை அறிமுகம் செய்து விடுகின்றனர். கவிதைகளைப் படித்த வாசகர்கள் தங்கள் கருத்தைப் பதியவும் மதிப்பிடவும் செயலியில் வசதிகள் செய்துள்ளனர். 

அலைபேசி உலகத்தில் கவிதைகளில் வலம் வந்து வாசகர்களின் உள்ளத்தைக் கொள்ளையடித்து வரும் கவிஞர் இரா. இரவிக்கு பாராட்டுகள். இந்த புதிய கவிதை செயலியின் மூலம் செயல்வீரராக வலம் வருகிறார்.

https://play.google.com/store/apps/details?id=com.maaricare.eraeravi&fbclid=IwAR1YEwx5K46ewQW8QnsfTh0J38wD5OFwg1ELAC2bHCjYqzAprMC6ACHvh4A

1 கருத்துகள்

கருத்துரையிடுக

புதியது பழையவை

Sports News