"கந்த சஷ்டி தினத்தில் முருகப் பெருமான் அருளைக் கொடுக்கும் அற்புத மந்திரம் !"

 "கந்த சஷ்டி தினத்தில் 

முருகப் பெருமான் 

அருளைக் கொடுக்கும் 

அற்புத மந்திரம் !" 


அன்பு அழகு அறிவு என மூன்றையும் ஓரு சேரப் பெற்றிருக்கும் அற்புதத் தெய்வம் தான் நம் அன்புக் கடவுள் முருகன்.  

எத்தனை நாமங்கள் ஐயா உமக்கு.. கந்தன், குமரன் ,கார்த்திகேயன், வடிவேலன்,சுப்பிரமணியன் என என்ன பெயர் சொல்லி அழைத்தாலும் இனிமை தான்.

  கந்தசஷ்டி திருவிழாவில் முருகன் அருளைப் பெறுவதற்காக 6 நாட்களும் கடுமையான விரதம் இருந்து காலையும் மாலையும் முருகனின் ஸ்தோத்திரப் பாடல்கள் மற்றும் கந்தசஷ்டி கவசம் போன்றவற்றை படிப்பது முருகன் இருக்கும் ஆலயங்களில் தங்கி வழிபாடு செய்வது என அத்தனைக்குமே பலன் உண்டு.  ஆலயங்களுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டில் இருந்தபடியே முருகனின் மூல மந்திரத்தை பாராயணம் செய்யலாம் அல்லது கேட்டுக்கொண்டே மவுனமாக இருக்கலாம்.  ஒவ்வொரு சஷ்டி தினமும் அல்லது கந்தசஷ்டி தினம் அல்லது செவ்வாய்க்கிழமை அல்லது நேரம் கிடைக்கும் போதெல்லாம் முருகனின் மூல மந்திரத்தை பாராயனம் செய்வதால் எண்ணிலடங்காத பல நன்மைகள் நடக்கும். எல்லா வகையான நோயும் நீங்கும், குழந்தைப் பாக்கியம் உண்டாகும், வறுமை நீங்கி செல்வம் 

சேரும், எதிராளிகளின் தொல்லை முழுமையாக நீங்கும், நம் வாழ்வில் அனைத்துவகையான வளமும் கிடைக்கும். ஓம் ஸெளம் சரவணபவ ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம்

க்லௌம் ஸௌம் நமஹ !

Voice : M.K. SUBHASH CHANDER

Music - Directed, Produced, Recorded, Mixed, Mastered, Video Edited by Tamilkovil


Post a Comment

புதியது பழையவை

Sports News