சென்னை புத்தகக் காட்சியில் கவிஞர். முத்துலிங்கம் தலைமையில் சிறப்பு கவியரங்கம்.

 சென்னை புத்தகக் காட்சியில் 

 கவிஞர் முத்துலிங்கம் தலைமையில்

 சிறப்பு கவியரங்கம்.




 45 ஆவது சென்னை புத்தகக் காட்சியில் முன்னாள் அரசவை கவிஞர் முத்துலிங்கம் தலைமையில் சிறப்பு கவியரங்கம்* நெல்லை கவிஞர்.கோ.கணபதி சுப்பிரமணியன், கவிதை வாசித்தார்.

 தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் சார்பில் சென்னை, நந்தனம், ஒய்எம்சிஏ உடற்கல்வியியல் கல்லூரியில் வைத்து 45 ஆவது சென்னை புத்தகக் காட்சி விழா நடைபெற்று வருகின்றது. 

முன்னாள் அரசவைக் கவிஞர்.முத்துலிங்கம் தலைமையில் சிறப்பு கவியரங்கம் நடைபெற்றது. 

பப்பாசி தலைவர் குமரன் பதிப்பக அதிபர் திரு.எஸ். வைரவன் முன்னிலை வகித்தார். 

துணை செயலாளர் திரு.இராம. மெய்யப்பன் வரவேற்றார். "எத்தனை கோடி இன்பம் வைத்தாய் "என்ற தலைப்பில் கலைமாமணி கவிஞர் ஏர்வாடி.எஸ். ராதாகிருஷ்ணன், அவர்களும்,'இனி பொறுப்பதில்லை எரிதழல் கொண்டு வா' என்ற தலைப்பில் கவிஞர் முனைவர் கோ கணபதி சுப்பிரமணியன், அவர்களும் ,"யாமறிந்த மொழிகளிலே" என்ற தலைப்பில் கலைமாமணி திருப்புகழ் மதிவண்ணன் அவர்களும், "வீழ்வேனென்று நினைத்தாயோ?" என்ற தலைப்பில் கவிஞர் மார்ஷெல் முருகன் அவர்களும்," மனைவியே சக்தி கண்டீர் "என்ற தலைப்பில் கவிஞர் தமிழ இயலன் அவர்களும், "பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடா "என்ற தலைப்பில் கவிஞர் .திருவை .பாபு  ஆகியோர் கவியரங்கில் கவிதை பாடினார்.

 பப்பாசி செயற்குழு உறுப்பினர் திரு. லோகநாதன் நன்றி கூறினார் .

நிகழ்வில் தேசியநல்லாசிரியர்.மதியழகன், வானதி பதிப்பக அதிபர் ராமநாதன், கவிஞர்.பாளை. மாணிக்கம்,கவிஞர் புனித ஜோதி குடியாத்தம் குமரன் பாரதி ராஜேந்திரன் சோரடியா, கவிஞர்.செல்வராஜ் கவிஞர்.சிவசுப்பிரமணியன்,திருச்சி. தினேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்


                                              ------------------------------------

Post a Comment

புதியது பழையவை

Sports News