திருநெல்வேலி செய்திகள்--- சங்கர் மேல்நிலைப்பள்ளியில் உலக ஈரநில தின விழா

 திருநெல்வேலி செய்திகள்

சங்கர் மேல்நிலைப்பள்ளியில்

 உலக ஈரநில தின விழா.


தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் துறை தேசிய பசுமைப்படை, குடிமக்கள் நுகர்வோர் மன்றம், நாட்டு நலப்பணித்திட்டம் இணைந்து சங்கர் மேல்நிலைப்பள்ளியில் உலக ஈர நில தின விழா நடைபெற்றது. 

பள்ளி தலைமையாசிரியர்.உ. கணேசன் தலைமை தாங்கினார். வந்திருந்தவர்களை பள்ளி உதவி தலைமை ஆசிரியர் ஆ.ரெங்கநாதன் வரவேற்றார். 

முதன்மை கல்வி அலுவலக சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் க.பெருமாள், சுற்றுச்சூழல் மேம்பாடு குறித்து சிறப்புரையாற்றினார். 

சங்கர் மேல்நிலைப்பள்ளி தேசிய பசுமைப்படை மற்றும் குடிமக்கள் நுகர்வோர் மன்ற திட்ட அலுவலர் முனைவர்.கோ. கணபதி சுப்பிரமணியன் ஈரநிலங்களின் தன்மை, இன்றையநிலை, பாதுகாப்பின் அவசியம், பயன்பாடு குறித்து சிறப்புரையாற்றினார்.

பள்ளி ஆசிரியை.சு. விஜயலட்சுமி ஆசிரியர்.ஞா.எட்வின் சுபாஷ், ஆ.மா. ஷேக் அப்துல்லாஹ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

தொடர்ந்து சுற்றுச்சூழல் மற்றும் ஈர நிலங்கள் குறித்து வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. நிறைவாக நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்.சொ. உடையார் நன்றி கூறினார்.

                                                -----------------------------------------------------

Post a Comment

புதியது பழையவை

Sports News