தோல்வி என்பது..,
வாழ்வின் முடிவல்ல...
-Dr.Fajila Azad, International Lifecoach
தவறுகளும் தவற விட்ட சந்தர்ப்பங்களும் ஏற்படுத்தும் பாதிப்புக்களை விட அவற்றையே மீண்டும் மீண்டும் சிந்தித்து அவற்றின் விளைவுகளைப் பற்றி கற்பனை செய்து கவலைப் படுவது அதிகமான பாதிப்பை ஏற்படுத்தி விடும்
ஏனென்றால் இந்த anxiety நிகழ்வுகளை மட்டுமல்லாமல் மனதையும் உடலையும் வருத்தி தன்னம்பிக்கையையும் தகர்த்து விடும்.
ஒன்றல்ல இரண்டல்ல உலகளவில் பதினாலுக்கு ஒருவர் என்ற வகையில் இப்படி anxity யால் பல பிரச்னைகளுக்கு ஆளாகிறார்கள் என அச்சுறுத்துகின்றன ஆய்வுகள்.
நீங்கள் செய்ய நினைக்கும் ஒவ்வொரு முயற்சியும், வெற்றி பெறுமா.. வெற்றி கிடைக்காவிட்டால் என்ன செய்வது என்று நினைக்கத் துவங்கினால் அந்த anxiety யே உங்கள் முயற்சிகளை நீங்கள் நினக்கும் விதத்தில் நடக்காமல் போவதற்கு வழி வகுத்து விடும்.
உங்கள் லாஜிக்கல் ப்ரெய்னை விட உங்கள் எமோஷனல் பிரைனும், ஆழ்மனதும் அதிகமான சக்தி வாய்ந்தது. ஒரு தவறு உங்கள் எதிர்காலத்தை பாதிக்காத முறையில் எப்படி சரி செய்யப் பட வேண்டுமென நீங்கள் எதிர் பார்க்கிறீர்களோ அப்படி நடப்பதாக நினத்துப் பாருங்கள்.
உங்கள் ஆழ்மனது அந்த முறையில் அந்த தவறை சரி செய்வதற்கான முயற்சிகளை எடுக்கும்.
உதாரணமாக தேர்வு சரியாக எழுதவில்லை என்ற வருத்தம் உங்கள் மனதில் சூழத் தொடங்குமுன் சட்டென்று சுதாரித்து, நீங்கள் நல்ல மார்க் தான் வாங்குவீர்கள் எல்லாம் நல்ல முறையில் சரியாக நடக்கும் என நேர்மறையாக எண்ணத் தொடங்குங்கள்.
ஒருவேளை அப்படி நல்ல மதிப்பெண் கிடைக்கவில்லை என்றாலும் அதனால் எதிர்காலமே பாதிக்கப் போவதில்லை. வாழ்க்கை என்பது வெற்றி தோல்வி எல்லாம் சேர்ந்த ஒன்று தான்.
ஒரு தோல்வி என்பது வாழ்வின் முடிவல்ல. அந்த முயற்சியின் முடிவு மட்டுமே. இன்னும் வாழ்க்கையில் செய்வதற்கும் தொடர்வதற்கும் வெற்றி அடைவதற்கும் நிறைய இருக்கிறது. எல்லாம் அனுபவ பாடம் தான் என உங்கள் மனதிற்கு நீங்களே சொல்லிக் கொள்ளுங்கள்.
---------------------------------------
கருத்துரையிடுக