சமயநல்லிணக்க நிகழ்ச்சி

 


திருநெல்வேலி ரோட்டரி கிளப்

 சார்பில்

 சமய நல்லிணக்க நிகழ்ச்சி. 
 திருநெல்வேலி ரோட்டரி கிளப் சார்பில் சமய நல்லிணக்கஇப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி முஸ்லிம் அனாதை இல்லத்தில்நடைபெற்றது. 

    நிகழ்விற்கு ரோட்டரி மாவட்ட ஆளுநர் ஜெசிந்தாதர்மா தலைமை தாங்கினார். ரோட்டரி மாவட்ட பொதுச்செயலாளர் அலெக்சாண்டர் மனுவேல் தொடக்க உரையாற்றினார். 

முஸ்லிம் அனாதை நிலையம் தலைவர் ஜனாப் எம் கே எம் கபீர், செயலாளர் எம் கே எம் சாபின்ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். 
ஜங்ஷன் ஜும்மா பள்ளிவாசல் துணைத்தலைவர்ஜனாப் எம் ஏ நசீர்  நோன்பின் மாண்பு குறித்து பேசினார்.

திருநெல்வேலி ரோட்டரி கழக தலைவர் எஸ் எஸ் ஷங்கர் செயலாளர் அந்தோ ஜோ செல்வக்குமார் உதவி ஆளுநர் வாசு முன்னாள் தலைவர் ரமணி சர்வசமய கூட்டமைப்பு மாவட்ட செயலாளர்முனைவர் கவிஞர் கோ கணபதி சுப்பிரமணியன்,எம்.ஓ.சி.பொருளாளர். ஜனாப். ஆரிப் சுல்தான் மற்றும் பலர்கலந்து கொண்டனர்.

 நிறைவாக பள்ளிவாசல் இமாம் நோன்பு திறப்பு நிகழ்வு நடத்தினார்கள். 

நோன்பு திறப்பு நிகழ்வுக்கான ஏற்பாடுகளை ரோட்டரி கிளப் ஆப் டின்னவேலி டாக்டர் கிரீஸ் தீபக் ,டாக்டர் ஜான்சன் ராஜா ஆகியோர் செய்திருந்தனர்.

                                                  ---------------------------------------


Post a Comment

புதியது பழையவை

Sports News