கலைமாமணி விருது

 

          கலைமாமணி விருது பெற்ற
                    கிராமத்துக் குயில் 

                    சந்திர புஷ்பம் பிரபு.


        தமிழக அரசின் கலை மாமணி விருதை பெற்றிருக்கிறார் பிரபல கிராமத்துக் குயில் முனைவர் ஆ.சந்திர புஷ்பம் பிரபுதிருநெல்வேலி வானொலி நிலையத்தில் தொடர்ந்து பல ஆண்டுகளாக பணியாற்றிய இவர் பல்வேறு கிராமத்து பாடல்களை பாடியுள்ளார். 

        இசை அமைத்து, பாடல் எழுதி சிறப்பாக பாடும் திறமை பெற்ற இவர், வானொலியில் நூற்றுக்கணக்கான நிகழ்ச்சிகளை தயாரித்துள்ளார். ஏராளமான சமூக விழிப்புணர்வு பாடல்களையும் எழுதி பாடியுள்ளார்

        இவரது பாடல்கள் பலராலும் பாராட்டு பெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.
www.nellaikavinesan.com இணையதளத்திலும் இவரது பல பாடல்கள் இடம் பெற்றுள்ளன.

    இப்போது ,கலைமாமணி விருதை பெற்றுள்ளார். சென்னையில் நடைபெற்ற விழாவில் தமிழக முதல்வர் மாண்புமிகு ஸ்டாலின் அவர்கள் இந்த விருதை வழங்கியுள்ளார்.

    "நெல்லைக் கவிநேசன் இணையதளம் " கிராமத்துக்கு குயிலை பாராட்டுகிறது. இனிய வாழ்த்துக்களையும் தெரிவித்து மகிழ்கிறது.

                                                        ----------------------------------

Post a Comment

புதியது பழையவை