பிரபல டாக்டர்.Y.R. மானெக் ஷா நூல் வெளியீடு.

 

 பிரபல டாக்டர்.Y.R. மானெக் ஷா

                          எழுதிய

                     நூல் வெளியீடு.

 

 


 பிரபல சித்த மருத்துவ வல்லுநர் டாக்டர்.Y.R. மானெக் ஷா எழுதிய சித்தமிருக்க பயமேன் என்ற நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

 

 


சித்த மருத்துவம்.

 
            தீராத நோய்களை சித்த மருத்துவ முறைகளை பயன்படுத்தி நீக்குவது எப்படி? என்ற நோக்கத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட நூல் "சித்தம் இருக்க பயமேன்? ".
     இதனை, பிரபல சித்தமருத்து வல்லுநரும், திருநெல்வேலி சித்த மருத்துவக் கல்லூரி பேராசிரியரும்,சென்னை சித்த மருத்துவ அமைப்பின் இயக்குனருமான டாக்டர்.Y.R. மானெக் ஷா எழுதியுள்ளார்.

        இந்த நூல் பிரபல வார இதழான ராணி வார இதழில் தொடர்ந்து பல வாரங்களாக சித்தமிருக்க பயமேன் என்ற தலைப்பில் கட்டுரையாக வெளிவந்தது.
 
        இந்த சிறந்த மருத்துவ கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூலாகும்.

 

 

                                                        நீதி அரசர்கள்.

நூலின் வெளியீட்டு விழா சென்னை அண்ணா சாலை மெட்ராஸ் மேலாண்மை சங்கத்தில் நடைபெற்றது. இந்த நூலை இந்து தமிழ் திசை பதிப்பகம் நூலாக வெளியிட்டுள்ளது.

சுப்ரீம் கோர்ட் நீதிபதி மாண்புமிகு திரு .R. மகாதேவன் அவர்களால் இந்த நூல் வெளியிடப்பட்டது. 


மெட்ராஸ் ஹைகோர்ட் நீதிபதி மாண்புமிகு திரு.A.D. ஜெகதீஷ் சந்திரா அவர்கள் உடனிருந்து நூல் வெளியீட்டு விழாவிற்கு சிறப்பு செய்தார்கள்.

 

 

 
                                            டாக்டர்.Y.R. மானெக் ஷா

 
மிகச் சிறந்த சித்த மருத்துவர் டாக்டர்.Y.R. மானெக் ஷா தனது ஏற்புரை நிகழ்த்தினார்.

அப்போது,"இந்த நிகழ்வு நடைபெறுவதற்கு எல்லா சூழல்களையும் எனக்கு சாதகமாக மாற்றி கொடுத்த எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி கூறுகிறேன். என்னையும் படிக்க வைத்து சான்றோர் மத்தியில் நிற்பதற்கு காரணமாக இருந்த அன்பு அப்பா அம்மாவை நன்றியுள்ள இதயத்தோடு நினைவு கூறுகிறேன். சித்த மருத்துவம் என்னை தடம் பதித்து தளராமல் ஓட வைத்துக் கொண்டே இருக்கிறது, இந்த சித்த மருத்துவம். வாழ்க சித்த மருத்துவம்" என மனம் மகிழ்ந்து மனநிறைவோடு தனது கருத்தை வெளியிட்டார்.

                                                                     பிரபலங்கள்.

நூல் வெளியீட்டு விழாவில் வரவேற்புரை நிகழ்த்தினார், பிரபல தன்னம்பிக்கை பேச்சாளரும் எழுத்தாளருமான டாக்டர் அப்துல் காதர் அவர்கள்.

கலைஞர் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் திருமதி கற்பகவல்லி அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள்.

முன்னாள் திருநெல்வேலி ஹலோ எஃப்எம் நிகழ்ச்சி தலைவர், பிரபல ஊடகவியலாளர் திரு ..சகாயராஜ் அவர்கள் நன்றி கூறினார்.

இந்த விழாவில் ஏராளமான உறவினர்கள் நண்பர்கள் அரசினர் சித்த மருத்துவ கல்லூரி பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் ஆகியோர் பங்கு பெற்று சிறப்பு செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


 














                                                                 ----------------------------

Post a Comment

புதியது பழையவை