நெல்லை புத்தகத்திருவிழாவில் நெல்லைகவிநேசன்


 நெல்லை புத்தகத் திருவிழா -2020



திருநெல்வேலி பாளையங்கோட்டை வ உ சி மைதானத்தில் நெல்லை புத்தகத் திருவிழா 2020 வெகு சிறப்பாகதொடங்கியது.



திருநெல்வேலி மாவட்ட நிர்வாகமும், தென்னிந்திய புத்தக பதிப்பாளர் மற்றும் விற்பனையாளர் சங்கமும் இணைந்து பிப்ரவரி 1ம் தேதி முதல்  10 ம் தேதிவரை இந்தப் புத்தகத் திருவிழாவை நடத்துகிறது.

புத்தகத் திருவிழாவை மிக சிறப்பாக கொண்டாடுவதற்கு , திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் .திருமதி . ஷில்பாபிரபாகர் சதீஷ் ஐ.ஏ.எஸ் மிக முயற்சி மேற்கொண்டார்.
புத்தகத் திருவிழாவை ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி. எம். ராஜலட்சுமிதொடங்கி வைத்தார்.
திருநெல்வேலி பாளையங்கோட்டை வ உ சி மைதானத்தில் நெல்லை

மாலையில் நடந்த விழாவிற்கு , திருநெல்வேலி,மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் கே பிச்சுமணி தலைமை வகித்தார்.திருநெல்வேலி மாவட்ட நூலக அலுவலர் திருமதி. ஆர் வயலட் முன்னிலை வகித்தார். பிரபல கவிஞர் கிருஷி அனைவரையும் வரவேற்றார்

சாகித்திய அகடாமி விருது பெற்ற எழுத்தாளர்களை கௌரவிக்கும் நிகழ்வில் பிரபல எழுத்தாளர் ஜோ .டி. குரூஸ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கப்பட்டது.



தென்னிந்திய புத்தக பதிப்பாளர் மற்றும் விற்பனையாளர் சங்க தலைவர் ஆர் எஸ் சண்முகம் வாழ்த்துரை வழங்கினார். மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் .டாக்டர் .தர்மராஜ், ஈரோடு மக்கள் சிந்தனையாளர் பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன், கவிஞர் தேன்மொழி ஆகியோர் உரையாற்றினார்கள்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.



திருச்செந்தூர் வணிக நிர்வாக இயல் துறை தலைவரும் எழுத்தாளருமான எஸ் நாராயண ராஜன் என்ற நெல்லைகவிநேசன் சிறப்புரையாற்றினார்.



பின்னர் சிறப்பு கவியரங்கம் நடைபெற்றது.





கவிரங்கத்திற்கு கலைமாமணி கவிஞர். ஏர்வாடி எஸ். ராதாகிருஷ்ணன் அவர்கள் தலைமை ஏற்றார்
.

"உள்ளம் தொடும் உறவுகள்" தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது.

பிரபல கவிஞர்கள் கவிஞர் சுப்ரா, கவிஞர் .தானப்பன், கவிஞர் சக்தி வேலாயுதம், கவிஞர் ஜெயபாலன், கவிஞர் ஹரிஹரன், கவிஞர் ரமணி முருகேஷ், கவிஞர் பிரபு, கவிஞர் முத்துசுவாமி, கவிஞர் பாப்பாக்குடி இரா செல்வமணி, கவிஞர்ச்சை மணி, கவிஞர் கிருத்திகா கணேஷ், கவிஞர் அனுசியா மற்றும் கவிஞர் சிற்பி பாமா ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் கவிதை வாசித்தார்கள் .





முடிவில் பிரபல பட்டிமன்ற பேச்சாளர் கணபதி சுப்பிரமணியன் நன்றி கூறவிழா இனிதே நிறைவேறியது




1 கருத்துகள்

  1. மட்டிலா மகிழ்ச்சி.
    செல்லும் இடம் எல்லாம் செல்வாக்கடையும்
    நெல்லைக் கவிநேசனை நினைத்து செட்டிகுளம் மக்கள் யாவரும் அடைகிறோம் மட்டிலா மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை

Sports News