பெங்களூர் பேராசிரியர் டாக்டர்.ஜான் மனோராஜ் பாராட்டு

பெங்களூர் பேராசிரியர் டாக்டர்.S.ஜான் மனோராஜ் பாராட்டு

நெல்லை கவிநேசன் நெருங்கிய நண்பரும், பெங்களூர் இந்தியன் இன்ஸ்டிட்டியூட் ஆஃப் பிளாண்டேஷன் மேனேஜ்மெண்ட் என்னும் மேலாண்மை கல்வி நிறுவனத்தின் பேராசிரியருமான டாக்டர்.S.ஜான் மனோராஜ் சமீபத்தில் நெல்லை கவிநேசன் இல்லத்திற்கு வந்தார். 

அப்போது, நெல்லை கவிநேசன் எழுதி தினத்தந்தி பதிப்பகம் வெளியிட்ட பழகிப் பார்ப்போம் வாருங்கள் என்னும் நூலைப்பெற்றுக்கொண்டு பாராட்டினார். 


புத்தகத்தைப்பற்றி…

‘பிறரோடு இணைந்து பழக வேண்டும்’ என்ற எண்ணம் எல்லா மனிதர்களிடமும் உள்ளது. இருந்தபோதும் சிலருக்கு குறிப்பிட்ட சிலரைக் கண்டால் மனதுக்கு பிடிப்பதில்லை. வேறுசிலரிடம் மணிக்கணக்கில் தேவையில்லாமல் பேசிக்கொண்டிருப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள். இதற்கு காரணம் என்ன? என்று சிந்தித்துப் பார்த்தால் சில உண்மைகள் நமக்குப் புரியும்.

பிறரோடு குழுவாக இணைந்து பழகுவதற்கு தடையாக சில காரணிகள் அமைந்துவிடுகின்றன. அந்தக் காரணிகளை அடையாளம்கண்டு அவற்றை நீக்குவதற்கு பழகிக்கொண்டால், இனிமையுடன் யாரிடம் வேண்டுமானாலும் எளிதில் பழகலாம். வளர்ந்து வருகின்ற போட்டி நிறைந்த உலகில் எந்தப் பணியில் ஈடுபட்டாலும் பிறரோடு இணைந்து பழகும் தன்மை அடிப்படைக் காரணியாக அமைந்துவிட்டது. பெரிய நிறுவனங்களில் பணியாற்றுபவர்களும், தொழில் நிறுவனங்களை தொடங்கி நடத்தும் தொழிலதிபர்களும் மட்டுமல்லாமல் எல்லா நிலையில் உள்ளவர்களும், சமுதாயத்தில் எங்கு சென்றாலும், ஏதேனும் ஒரு குழுவில் இணைந்து பணியாற்றுகின்ற நிலை ஏற்பட்டுவிடுகிறது. எனவேதான், குழுவோடு இணைந்துப் பழகும் திறன் வளர்ச்சி என்பது அனைவருக்கும் தேவையான ஒன்றாக மாறிவிட்டது.

“பழகிப் பார்ப்போம் வாருங்கள்” என்ற தலைப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்தநூல், குழுவோடு இணைந்து வெற்றிகரமாக பணியாற்றுவதற்கான வாய்ப்புகளையும், நுணுக்கங்களையும் உள்ளடக்கி, பல உதாரணங்களையும், உண்மை நிகழ்வுகளையும் தாங்கி, சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மலர்ந்த முகத்தோடு மற்றவர்களை சந்திப்பதற்கும், வாழ்க்கையில் வெற்றிகளை குவிப்பதற்கும் இந்நூல் பெரிதும் துணையாக அமையும்.


விலை: ரூபாய்.150/-

Post a Comment

புதியது பழையவை

Sports News