இந்தியன் வங்கி மேலாளர் சந்திப்பு

இந்தியன் வங்கி மேலாளர் சந்திப்பு

நெல்லை கவிநேசனின் முன்னாள் மாணவர் திரு.முத்துசங்கர். திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் பி.பி.ஏ. படித்து போட்டித்தேர்வு எழுதி, இந்தியன் வங்கியில் பணியில் சேர்ந்தார். 

சமீபத்தில், திருச்செந்தூர் இந்தியன் வங்கி கிளைக்கு மேலாளராக நியமிக்கப்பட்டார். திருச்செந்தூரில் மேலாளராகப் பதவியேற்ற திரு.முத்து சங்கர், தான் படித்த ஆதித்தனார் கல்லூரி வணிக நிர்வாகவியல் துறைக்குவந்து தனது நன்றியைத் தெரிவித்தார். 

“திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியும், வணிக நிர்வாகவியல் துறையும் எனது வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைந்தது. இங்குள்ள அனுபவங்கள் என் வாழ்நாளில் என்றும் மறக்க முடியாது. கல்லூரி நிர்வாகத்திற்கும், வணிக நிர்வாகவியல் துறைக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். குறிப்பாக-வணிக நிர்வாகவியல்துறைத் தலைவர் டாக்டர்.S.நாராயணராஜன் என்ற நெல்லை கவிநேசன், துறைப் பேராசிரியர்.டாக்டர்.A.அந்தோணி சகாய சித்ரா ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று நெஞ்சம் நெகிழ்ந்து தனது நன்றியைத் தெரிவித்தார். 

Post a Comment

புதியது பழையவை

Sports News