திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் ஆளுமை வளர்ச்சி பயிற்சி முகாம்.


திருச்செந்தூர் 
ஆதித்தனார் கல்லூரியில் 
ஆளுமை வளர்ச்சி பயிற்சி முகாம்.திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி வணிக நிர்வாக இயல் துறை மற்றும் ஆதித்தனார் கல்லூரிமாணவர் வழிகாட்டு மையம் இணைந்து 3 நாள் ஆளுமை வளர்ச்சி பயிற்சி(PERSONALITY DEVELOPMENT) முகாம் நடத்தியது

இந்த பயிற்சி முகாம் ஜனவரி மாதம் 23-ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை ஆதித்தனார் கல்லூரியில் நடைபெற்றது .
இந்தப இந்த பயிற்சி முகாம் தொடக்க விழாவிற்கு ஆதித்தனார் கல்லூரி முதல்வர் டாக்டர். டி .எஸ் .மகேந்திரன் தலைமை வகித்தார் .ஆதித்தனார் கல்லூரி செயலர் டாக்டர் .எஸ். ஜெயக்குமார் வாழ்த்துரை வழங்கினார்

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி வணிக நிர்வாக இயல் துறை தலைவரும் எழுத்தாளருமான டாக்டர் . எஸ் நாராயண ராஜன் என்ற நெல்லைகவி நேசன் சிறப்பு பயிற்சியாளராக கலந்துகொண்டு மூன்று நாட்களும் பல்வேறு தலைப்புகளில் மாணவ மாணவிகளுக்கு பயிற்சிகள் வழங்கினார்.

ஆளுமை திறனை வளர்ப்பது எப்படி? மனப்பாங்கை மாற்றுவது எப்படி? நேர்முகத் தேர்வில் வெற்றி பெறுவது எப்படி? போட்டித் தேர்வுகளுக்கு தயாராவது எப்படி ? என்ற பல தலைப்புகளில் உரையாற்றி மாணவ-மாணவிகளுக்குபயிற்சிகளை வழங்கினார்.
  


மொத்தம் 40 பேர் கலந்துகொண்ட பயிற்சி முகாமுக்கு அமைப்பாளராக பேராசிரியர் டாக்டர்.சேகர் ,பேராசிரியர்   டாக்டர் .அந்தோணி சகாய சித்ரா ஆகியோர் செயல்பட்டார்கள்

பயிற்சி முகாமில் கலந்துகொண்ட அனைத்து மாணவ மாணவிகளுக்கும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன


Post a Comment

புதியது பழையவை

Sports News