ஓவிய வல்லுநர் நாணா எழுதும் தொடர்-14
முதல் அட்டைப் ’பயம்’…

கம்ப்யூட்டர் என்ற ஒரு வஸ்து வடிவமைப்புக்குள் வராத காலம்!

இதே ஏப்ரல்..மாதம் ...ஒரு 32 வருடங்களுக்கு முன் (02-04-1988)

"கல்யாண்… இந்த அட்டை..டிசைன்.. யாருப்பா அது  நாணா.. ?" என்று ஓவிய நடிகர்  சிவகுமார் என்னும் ’ஆக்டர் வாய்ஸ் - பாஸிவ் வாய்ஸாகி’…  பின்னால் வந்த என் காதுகளின் யூஸ்டேசியன் குழாய் வழியே…என் கை ரோமங்களில் REFLECTS ஆனது…

திரையில் கேட்ட அதே கணீர்க் குரல்... first time....ஒரு நடிகர்/ஓவியர் முன்னால்...’எதோ தப்பு செய்த ஸ்கூல் பையன் போல’...நின்றேன்.அதற்குமுன் ஒரு சிறு சுருக்க்க்க்கம்....!

பதினோறாப்பு முடிச்சு எக்ஸாம் எழுதிய கடைசி செட்..நாங்கதான்ன்னு நெனைக்க்க்கேன்.  பள்ளித்தேர்வுகள் சமயம் 15 நாட்களுக்கு மேல் வீடடங்கி இருந்த எங்களுக்கு கடைசிப் பரீட்சை பேப்பர்களைச் சேர்த்து, நூல்கட்டும் நொடியிலிருந்து
144 தடை நீங்கியது போல…ஒரு தலைகால் புரியாத ஃபீலிங்ஸ்!
தியேட்டர் இல்லாத அழகான இராங்கியம் கிராமத்தில் பள்ளி லீவு நாட்கள் யாவும் தினசரி திரில்லிங்!

பாய்ஸ் vs வைல்ட் போல…காடு கரை..கண்மாய்..  வயல் கிணறுகளில் தலைகீழாக பாய்தல்…பனையேறி  நுங்கு வெட்டுதல்… அன்றைய தினமே இதற்கெல்லாம் திட்டுவாங்குதல்…. மறுபடி..


பம்பரம், கோலி, கிட்டிப்புள், பால் பேட்மிண்டன்…இதெல்லாம் தாண்டி….வாடகை சைக்கிள் எடுத்து சக நட்பு சூழ பக்கத்து ஊரு டெண்ட் கொட்டாய் சினிமா என்பது…ஒரு மாஸ்!   அந்த 70-80களில்… சிஐடி சங்கர், கங்கா, ஜக்கம்மா, துணிவே துணை, …  என ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்து…கீழ்க்கண்ட ஏதேனும் சில அம்சங்களில் ’மெய்’மறப்போம்!

# ஜெய்சங்கர் Vs அசோகன் கெளபாய்..கொள்ளைக் கூட்டம் தெறித்து உருளும்… (தேவையே இல்லாத)…காலி ட்ரம்கள்! குறி மிஸ்ஸ்ஸாகி…எஸ்ஸாகி.. சம தளத்திலும் நாயகன் கையை விடாமல் ஓடும்  அந்தக் கம்மி ட்ரெஸ் ’கத்தா’ நாயகி!

# சில நேரம் சைக்கிளில் கடந்து சென்ற கடியாபட்டி, கானாடுகாத்தான் வீதிகள் யாவும் வெள்ளித்திரைக் கர்ணன் கேமராவுல… மெக்ஸிகன் - டெக்ஸாஸ் சிட்டி லெவெல்ஸ்! அதுவும்… பிளாக் & ஒயிட்லேயே!


# அடுத்த சில நொடிகளில் இடைவேளை வரப்போவதை தெரிந்து சட்டென எழுந்து ஒலியெழுப்பும் ’முறுக்குக்கூடைத் தலையன்கள்’ கார்பன் ராடுகளின் ஒளிப் பாய்ச்சலில்  திரைநிழல் திப்பு சுல்தான்களாய் கடக்கும் சில நொடிகள்!

# பின்னணியில் ஹாலிவுட்டில் சிரமப்பட்டு கம்போஸ் ஆன ஃபார் எ ஃப்யூ டாலர்ஸ் மோர் (FOR A FEW DOLLARS MORE) தீம் ம்யூசிக் COPYRIGHT ISSUES நெருடல் ஏதுமின்றி சங்கர்-கணேஷால் ஜெராக்ஸ் அடிச்சது… (விசில் கலந்த கிட்டார்… ஏ. மைனர் ‘டெக்யூலா’ பீட் மாறாமல் ஸ்ருதி சுத்தமாய்) படம் முடிஞ்சு வீடு வந்ததுக்கப்புறமும் காதுக்குள் ரிப்ப்பீட் அடிக்கும்! https://www.youtube.com/watch?v=DT1NJwEi6nw ( வீடியோ: சக்கரம் சுழலும் சப்தத்துடன் ..அதே பாடல் சிம்பொனி ஸ்டைல்!)

படம் முடிஞ்சு வெளியே வந்தா…!‘ரட்ட்டடட ரட்ட்டட’ன்னு சட்டையணியாத ‘சிவமணி’களின்  மெட்டல் ட்ரம்ஸ் ... கொத்து பரோட்டா துள்ளும்...அந்த  ஹை டெசிபல் ரிதத்துடன்.........பச்சை மற்றும் ரோஸ் கலர் டியூப்லைட் வெளிச்சத்தில் .. கொத்து பரோட்டாவை  சவுண்டோட பகிர்ந்து சாப்பிடுவது ..... மாயாஜால்ல ஒரு பேமிலி ட்ரீட் வைத்ததற்குச் சமம்!

சைக்கிள் & மாட்டுவண்டிகளுக்கு டூரிங் தியேட்டர்களில் எப்பவுமே முதல் மரியாதை…! யெஸ்… எவ்வளவு கூட்டம் இருந்தாலும் ஒரு சைக்கிளுடன் செல்வோருக்கு 2 டிக்கட் உறுதி! ரெகுலர் டிக்கட் கவுண்டர் டைம்க்கு 10 நிமிடத்துக்கு முன் ’தட்கால்’ மாதிரி சைக்கிள் டிக்கெட் கவுண்டர் ஓப்பன் ஆகும்! அப்போதெல்லாம் டூரிங் தியேட்டர்களின் எழுதப்படாத அனுசரணை. சுமார் 10 மைல்  சைக்கிள் மிதிச்சு, நைட் வாடகை கொடுத்து + ( வைக்கோல் + தண்ணியுடன் மாட்டுவண்டி கட்டி ) படம் பார்க்க வந்தோர் ஏமாறக்கூடாது என்ற மனிதாபிமான அடிப்படையில் ஒரு ’சுமூக’ இணக்கம்!

பின்னாளில் வாடகை சைக்கிள்களில் இரவு நேரத்திலும் பளிச் சென்று தெரியும் வகையில் பெயர் & நம்பர் எழுதியதில் பக்கத்து ஊர்களில் உள்ள அத்தனை சைக்கிள் கடை, மற்றும் சவுண்ட் சர்வீஸ் உரிமையாளர்களும் ’பெல்’ பட்டனை அமுக்கியதில் நோட்டிஃபைடு ஆனேன்.. அப்டியே…உருவாகிய என் சிறு வட்டத்தை நீள் வட்டமாக்கி திருச்சி வரைக்கும் விரியச் செய்தார் திரு. கண்ணன் ஆர்.ஆர். .. லயன் R.R. Kannan ...திருச்சியிலிருந்து சென்னைக்கு நீண்டது அலாய்சியஸ் Aloysius https://www.facebook.com/asjaloys நட்பில்! அப்படி சென்னையில் ஐக்கியமாகி (சுய விளம்பரம் எதுவுமில்லாமல்) ...ஒரு விளம்பர நிறுவனத்தில் வேலை செய்த என்னை...நான் விரும்பிய பத்திரிகை வடிவமைப்புத் துறைக்குள் இழுத்துவிட்டார்.. நண்பர் திரு. கல்யாண்குமார்! https://www.facebook.com/kalyan.kumar.18488169


டைரக்டர் கே.ரங்கராஜ். இயக்கத்தில் சிவகுமார் ராதா நடித்த மனிதனின் மறுபக்கம் படம் வெளியான சமயம். …படமாக்கப்பட்ட சிறைச்சாலைக் காட்சிகள்… இடைவேளையில் அங்குள்ள உண்மைக் கைதிகளிடம் கேட்டறிந்த நிகழ்வுகளைக் கோர்த்து அப்போது ஜூனியர் விகடனில் ‘குற்றம் நடந்தது என்ன? பாணியில்… ஜெயிலில் கேட்ட உண்மைக் கதைகள் தொடராக எழுதினார் உதவி இயக்குநர் கல்யாண்குமார். அதைத் திடீர்ன்னு ஒரு புத்தகமாக வெளியிட நாள் குறிக்கப்பட்டு அவசரகதியில் அட்டைப்படம் செய்யும் பொறுப்பு என் கையில்…! அதிலுள்ள 10-15 கதைகளையும் படிச்சுட்டு….ஒரே ஓவியத்தில் கதைக் கரு..ப்ளஸ் அவசரம் ... இரண்டே வண்ணத்தில் (பட்ஜெட் சிக்கல்) செய்தேன்…...ஒரு நூத்திச்சொச்சம் பக்கங்களைக் கம்போஸ் பண்ணும்போதெல்லாம் அட்டை பற்றிய அவசரம் இல்லாமல்.... கடைசியில் அச்சேறும் மணித்துளிகளில் அட்டைப்படம்  அவசரம்...என்பது இன்றும் தொடரும் விதி.. அப்போ நாலு கலர் ஆப்செட் பிரிண்டிங் அளவுக்கு பட்ஜெட் இல்லாமையால் ... இரண்டு கலரில் என்னால் முடிந்ததை செய்தேன்!

அண்ணாசாலை…மஞ்சள் ஒளியில் ஜெமினி மேம்பாலம் …

கம்ப்யூட்டர் பிறக்காத.. 1988-ல்  பாவாணர் நூலக அரங்கம்!

புத்தக வெளியீட்டுக்கு போதிய அளவு விளம்பரம் இல்லாததால்  (கொரோனா எபெஃக்ட் போல) ஆரம்பத்தில் கூட்டம் இல்லாமலிருந்து ...பிறகு எகிறியது...

சென்னைக்கு வேலை தேடி வந்து சில மாதங்களே ஆன நிலையில் முதன் முறையாக...( சன் டிவி..குரல் மைண்ட் வாய்ஸா வரு’வதை’த் தவிர்க்க முடியாது போல...)  சினிமா பிரபலங்களை நேரில் பார்த்தும் ... அதை உடனடியாக யாரிடமும் ஷேர் செய்ய முடியாத...ஒரு கையறு ஃப்ளைட் மோட். நிலை!

பந்தா ஏதுமில்லாமல் நடிகர் திரு .சிவகுமார்....திரு.மாலன். குறித்த நேரத்துக்கு முன்னதாகவே வந்து ஆஜராகி பார்வையாளர்கள் இருக்கையில் உட்கார்ந்திருந்தது ஆச்சரியப்படுத்தியது! அதைவிட ஆச்சரிய அதிர்ச்சி அடுத்த நிமிடம் என்னைத் தேடி வந்து தாக்கியது. ஏற்கெனவே ஜூனியர் விகடனில் வெளிவந்த கதைகள் என்பதால் யாருக்கும் அட்டைப் படத்துடன் புத்தக ‘மாதிரி காப்பி ‘ரெடி செய்து கொடுக்க அவசியப்படவில்லை. வழக்கமான பிரிண்டிங் குளறுபடியில் அட்டை சகிதம் முதல் நாள் தான் புத்தகம் ரெடியானது.  விழா ஆரம்பிக்க ..சில நிமிடங்கள் முன்பு அந்த அட்டைப் படத்தை உற்றுப் பார்த்த ஓவிய நடிகர்

அட்டை..டிசைன் யாரு கல்யாண்? என்பது காதில் கேட்ட போது அது என் கைகளின் ரோமங்களில்
REFLECTED ஆனது
(இப்போ... விட்ட இடத்திலிருந்து) அவரும் சிறந்த ஓவியராச்சே...என்ன சொல்வாரோன்னு..

எதோ தப்பு செய்த ஸ்கூல் பையன் மனநிலை... அந்த அட்டைப்’பயத்தில்’ அவர் அருகில் நிற்பதா…? அமர்வதா...? என்ற என் ’கிராமத்து உதறலை’ திரு. மாலன் சார் கவனித்து ’சரியாக’ உட்காரச் சொல்லித் தணிய வைத்தார் ..அட்டைப் படத்தைக்காட்டி...இந்த விஷுவல் ஐடியா எப்படி வந்தது? பற்றி விசாரித்து… பாராட்டியபோது… என் ஜென்மம் சாபல்யம் அடைந்தது எனக்கு மட்டுமே தெரியும்! ...இப்போது அது உங்களுக்கும் தெரிஞ்சிட்ட்ட்ட்டு! ….

ஒரு கைவிலங்கு…ஜெயில் கம்பிகள் அதன் பின்னால் ஷேவ் செய்யப்படாத ஒரு கைதியின் நிழலுருவம்! top Flesh cut bleed வரைக்கும் ஒரு செயின்… ப்ளாக் அன் ரெட் கட் கலர்!மேடையில் திரு.சிவகுமார், திரு,மாலன்...மற்றும். இயக்குநர் பீட்டர் செல்வக்குமார், ’யார்’ கண்ணன், நா. காமராசன், இயக்குநர். கே.ரங்கராஜ். பதிப்பாளராக நண்பர் திரு.ராசி அழகப்பன், நூலாசிரியராக கல்யாண்குமார், (மற்றும் பலர்!) என ஒவ்வொருவராக மேடையேற .....கடைசியாக திரு. சிவகுமார் "அட்டை ஓவியரும் ...மேடைக்கு வரணும்" என்று என்னையும் ஏற்றி அமரச் சொன்னபோது ....என் ஓவியமே என்னை மேடையேற்றிய மகிழ்வும் ஒரு படபடப்பும்!. 

பின்னர்... இந்தியா டுடே நாட்களில் திரு. சூர்யாவை சந்திக்கு முன் கிடைத்த இரண்டு மணி நேர வாய்ப்பில் சூர்யாவை பென்சில் ஓவியமாக கொடுத்த சமயம்….என்னை முதல் மேடையேற்றியதை நினைவூட்டி.. ஓவிய நடிகரை ஓவியமாக வரைந்து கொடுக்கணும் என ஒரு ஆவல் கிளம்பியது.

ஒரு நெடிய இடைவெளிக்குப்பின்.. திரு .காந்தி கண்ணதாசன் https://www.facebook.com/gkannadhasan நட்பில்  கவியரசர் 90 கவிவிழா மேடையில்

மீண்டும் சிவகுமார் சாரும் நானும்...அன்று..கவியரசர் கையெழுத்தை நான் எழுத்துருவாக்கி அதனை இசைஞானி ராஜா சார்  கரங்களால் வெளியிட்ட சமயம்…(அதன் விபரம்…அடுத்து விரைவில்...)


விழா முடிந்த மேடையில் சிவகுமார் சாரிடம் ’உங்களை வரைந்த பென்சில் ஓவியம் ரெடி...ஆனால் நேரில் கொடுப்பதற்குத் தயக்கம்’ என்பதைச் சொன்னேன்…..தோளில் தட்டிக்கொடுத்து ’எப்படித்தான்  வரைஞ்சுருக்கன்னு பாக்கணுமே..எடுத்துட்டு வா’…என்று தைரியப்படுத்தி…சந்திக்கச் சொன்னார். விரைவிலேயே அந்த வாய்ப்பும், வாழ்த்தும் அவர் கையெழுத்துடன் கிடைத்தது.1988- 2020) …32 வருடங்கள் கழித்து சமீபத்தில் மறைந்த எழுத்தாளர் பிரபஞ்சன் நினைவாக (நன்றி: நண்பர் திரு. வேடியப்பன், https://www.facebook.com/DiscoveryVediyappan டிஸ்கவரி புக் பேலஸ்) விழாவில் பரிசு பெற்ற மெக்ஸிக்கோ என்னும் புத்தக அட்டை வடிவமைப்பை செய்து கொடுத்தேன்… அதே தேவநேயப்பாவாணர் நூலக அரங்கில்… மீண்டும் ஒரு புத்தகவெளியீடு

அதே மேடையில்....அதே நடிகர் சிவகுமார்…அதே போல ஒரு அட்டை வடிவமைப்புடன்  மெக்ஸிக்கோ!சென்ற வாரம் அந்த விழா பற்றி… ஜெயிலில் கேட்ட உண்மைக்கதைகள் நூலாசிரியர் கல்யாண்குமார் நினைவூட்டலில்…அன்றைய நாளின் நிகழ்வுகளை நடிகர் சிவகுமார் அவர்களின் 1988ன் டைரியில் குறிக்கப்பட்டதைத் தேடி எடுத்து வாட்சாப் பகிர்ந்து கொண்டதை எண்ணி…மகிழ்ந்தோம்! அப்போது ஆரம்பிக்கப்ப்ட்ட திரு.ராசி அழகப்பன் https://www.facebook.com/azhagappan.rasi அவர்களின் பேஜஸ் பப்ளிகேஷன்ஸ்க்கும் ஒரு லோகோ வடிவமைத்தேன். பேப்பர் மடித்தது போலும்…கூகிள் இல்லா நாட்களில் Ref எதுவுமில்லாமல் செய்த வேலைகள் …இன்றும் திருப்தியளிக்கும் நினைவுகள்!
இப்போது போல கம்ப்யூட்டர் DTP  இல்லாத அச்சுக்கோர்ப்பு டைம்!  1988 ல் நண்பர் திரு. ராசி அழகப்பன் கைப்பட எழுதிய அந்த நிகழ்வுக்கான நிகழ்ச்சி நிரல்…மற்றும் நன்றிக் கடிதம், என் மணவிழா வரவேற்புக்கு ’மய்யம்’ அலுவலகத்தையே தந்து...திரு. கமல்ஹாசன் வர இயலாத நிலையில் ...’குட்டி’ ஸ்ருதி கமல்ஹாசனுடன் வந்து வாழ்த்திய நொடிகளும்... என்  வாழ்வில் முக்கியமானது. என்றும் அன்பும் + நன்றி மறவாமையுடன்... (அத்துடன் இங்கே இத நான் சொல்லியே ஆகணும்!) ராசி சார் கையெழுத்தை எழுத்துருவாக வடிவமைக்கலாம்..அவ்ளோ அழகு.!

அந்த பழைய கையெழுத்து நாட்களின் நட்பு வட்டம்……

இன்றைய வாட்சப் யுகத்திலும் தொடர்வது…பனி விழும் சுகம்!… வரம்!


இன்னும் இருக்குதொடர்வேன்!


2 கருத்துகள்

  1. ஓவியனே மெரினா புகைப்பட கலைஞனே உன்னால் எதையும் சுவாரசியமாக சொல்லமுடியும் என்பதை இரண்டு வரி கருத்தை இல்லை இல்லை அய்யன் வள்ளுவனைப்போல் நறுக்கென்று புகைப்படங்களுக்கு எழுதும் கவிதையை காதலிக்காத மக்களே இருக்கமுடியாது. அதில் முதலாக நான். உன்னோடு நானும் பயணித்த அந்தக் காலங்கள் பயணித்துக்கொண்டிருக்கும் இந்த நாள்வரை நட்பு தொடர்வதில் பெரும்பாலும் நாம் பேசிகொள்பவை ஓவியம், புகைப்படம், வடிவமைப்பு.... ஹிந்து பத்திரிக்கை முதல் முதலில் என்னை கர்வப்படுத்திய அந்த புகைப்படம் D majorல் உன் கைவிரல்கள் புல்வெளியில் கிட்டார் வாசிக்கும் படத்தை..வெளியிட்டு tune to green foliage என்று தலைப்பிட்டு வாழ்த்தியபோது ஏற்பட்ட சிலிர்ப்பு உனது ஒவ்வொரு வரிகளைப்படுக்கும் போதும் உணர்கிறேன். எழுது எழுது எழுதிக்கொண்ட்டே இரு நாங்கள் உன் எழுத்துக்களை சுவாசித்துக்கொண்டே இருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  2. ஓவியனே மெரினா புகைப்பட கலைஞனே உன்னால் எதையும் சுவாரசியமாக சொல்லமுடியும் என்பதை இரண்டு வரி கருத்தை இல்லை இல்லை அய்யன் வள்ளுவனைப்போல் நறுக்கென்று புகைப்படங்களுக்கு எழுதும் கவிதையை காதலிக்காத மக்களே இருக்கமுடியாது. அதில் முதலாக நான். உன்னோடு நானும் பயணித்த அந்தக் காலங்கள் பயணித்துக்கொண்டிருக்கும் இந்த நாள்வரை நட்பு தொடர்வதில் பெரும்பாலும் நாம் பேசிகொள்பவை ஓவியம், புகைப்படம், வடிவமைப்பு.... ஹிந்து பத்திரிக்கை முதல் முதலில் என்னை கர்வப்படுத்திய அந்த புகைப்படம் D majorல் உன் கைவிரல்கள் புல்வெளியில் கிட்டார் வாசிக்கும் படத்தை..வெளியிட்டு tune to green foliage என்று தலைப்பிட்டு வாழ்த்தியபோது ஏற்பட்ட சிலிர்ப்பு உனது ஒவ்வொரு வரிகளைப்படிக்கும் போதும் உணர்கிறேன். எழுது எழுது எழுதிக்கொண்ட்டே இரு நாங்கள் உன் எழுத்துக்களை சுவாசித்துக்கொண்டே இருக்கிறோம்.....அலாய்சியஸ்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை

Sports News