திருமணமும், குழந்தையும் தடையல்ல"
திருமதி. ஷானாஸ் இலியாஸ்
"IAS தேர்வில் வெற்றி பெற திருமணமும் குழந்தையும் தடையல்ல" என்பதை தனது முதல் முயற்சியில் I.A.S பணியை எட்டி நிரூபித்துள்ளார் திருமதி. ஷானாஸ் இலியாஸ்
2020 ம் ஆணடு நடைபெற்ற குடிமைப்பணி தேர்வில் அகில இந்திய அளவில் 217வது இடத்தை பிடித்து சாதனை படைத்தவர் திருமதி Shahhnaz Illyas. செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரில் பிறந்தவர்.
பள்ளி கல்வியை சென்னையிலும், பொறியியல் பட்டப்படிப்பை BSA அப்துர் ரகுமான் பொறியியல் கல்லூரியிலும் படித்து முடித்தவர்.
ஏற்கனவே, திருமணமாகி இரண்டு வயது குழந்தைக்கு தாயானவர். மென்பொருள் பொறியாளராக நான்கு ஆண்டுகள் வேலை பார்த்துள்ளார். இதையும் தாண்டி இந்த சாதனையை படைத்துள்ள ஷானாஸ் அவர்களுக்கு நமது வாழ்த்துக்கள்.
குடிமைப்பணி தேர்வில் தான் வெற்றி பெற்ற அனுபவத்தையும் இளைஞர்கள் வெற்றியை எவ்வாறு அடைய முடியும் என்ற சூட்சுமத்தையும் பகிர்ந்து கொள்கிறார்
கருத்துரையிடுக