நெல்லை கவிநேசன் எழுதிய "அய்யா வைகுண்டர் அருளுமுதம்"

நெல்லை கவிநேசன்
 எழுதிய 
"அய்யா வைகுண்டர் அருளுமுதம்"“அகிலத்திரட்டு அம்மானை”, “அருள்நூல்” இவை இரண்டும் அய்யா வழியைப் பின்பற்றுபவர்களுக்கு வேதமாக உள்ளன. நாட்டு நடப்புகள், வாழ்க்கை நெறிகள் மற்றும் எதிர்காலக் கணிப்புகளும் அதில் உள்ளன. அவ்விரு நூல்களையும் படித்து முழுமையாகப் பொருள் உணர்ந்துகொள்வது கற்றவர்களுக்கும்கூட கடினமானது.

அதனை எளிமைப்படுத்தி, எல்லோரும் படித்துணரும் வகையில், நெல்லை கவிநேசன் அவர்கள் ஒரு சிறந்த பணியினைச் செய்துள்ளார்கள். அகிலத்திரட்டின் சாரத்தைப் பிழிந்து எடுத்து 42 தலைப்புகளில் தேவையான கருத்துக்களைத் தந்துள்ளார்கள்.

இந்நூலைப் படிப்பவர்கள் உள்ளத்தில் ‘அகிலத்திரட்டு அம்மானை அருள்நூல்’ மூலநூலைப் படிக்க வேண்டும் என்ற ஒரு தூண்டுதல் ஏற்படும்.

அய்யா நெறியில் பற்றுதல்கொண்ட திரு.நெல்லை கவிநேசன் அவர்கள் ஏற்கனவே அய்யா வைகுண்டரைப்பற்றி சில நூல்கள் எழுதியுள்ளார்கள். 

“அய்யா வைகுண்டர் அருளமுதம்” என்னும் இப்புத்தகம் சற்று வித்தியாசமாக, அய்யா போதித்த வாழ்க்கை நெறிகளையும், தீர்க்க தரிசனங்களையும் கோடிட்டுக் காட்டுவதாக உள்ளது.

(அய்யா வைகுண்டர் அருளுமுதம் நூலின் வாழ்த்துரையில் கல்வியாளர் திருமிகு.கே.தாண்டேஸ்வரன்அவர்கள்)

விலை: ரூபாய். 50/-

மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண்: 88381 89438


அய்யா வைகுண்டர் அகிலசெய்தி .

திரு.நாகராஜன் அய்யா அவர்களின் அகிலசெய்தி மிக மிக அருமை .

அதை சிறப்பாக செய்த திரு.சிவதா முருகன் அவர்களுக்கு நன்றி. 


Post a Comment

புதியது பழையவை

Sports News