ஃபேஸ்புக் வழங்கிய தகவல்

 







திருநெல்வேலி பிரபல வழக்கறிஞர்

 திரு ஜாபர் அலி அவர்கள்

 தனது ஃபேஸ்புக் குறிப்பில் 

வழங்கியதகவல் இது

நான் இன்று காலை jogging ( ஜாகிங்) சென்றுக் கொண்டிருந்த பொழுது எனக்கு முன்னால் 1/2 கிலோ மீட்டர் சென்று கொண்டிருந்த ஒரு நபரைச் கவனித்தேன்.

அவர் ஓடிக் கொண்டிருந்த வேகத்தைப் பார்த்த பொழுது அவர் சற்று என்னை விட மெதுவாக ஓடுகிறார் என்பதை என்னால் யூகிக்க முடிந்தது.

அது எனக்கு ஒரு நல்ல உணர்வை தந்தது.

நாம் அவரை பிடித்து விடலாம் என எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்.

எனவே நான் என்னுடைய வேகத்தை அதிகரித்துக் கொண்டே சென்றேன்.

சிறிது ,சிறிதாக எங்களுக்கு இடையே உள்ள தூரம் குறைந்து கொண்டே வந்தது.

சில நிமிடங்களுக்கு பிறகு ,

எங்களுக்கு 100 அடி இடைவெளி மட்டுமே இருந்தது.

எனவே நான் இன்னும் வேகத்தை கூட்டி அவரைப் பிடித்து விட வேண்டும் என்ற நோக்குடன் வேகத்தை அதிகரித்தேன்.

இறுதியாக, சாதித்து விட்டேன்!

அவரைப் பிடித்து, அவரைக் கடந்தும் விட்டேன்.

எனக்குள் " அவரைக் கடந்து விட்டேன்", என மிகவும் நல்ல படியாக உணர்ந்தேன்.

ஆனால் அந்த நபருக்கு ,

நான் அந்த நபருடன் போட்டி போட்டது கூட தெரியவில்லை.

அவரைக் கடந்த பிறகு, நான் அவரைக் கடப்பதிலே என்னுடைய கவனம் சென்றதால் உணர்ந்து கொண்டவை.....

1. என்னுடைய இல்லத்திற்கான வளைவில் நான் திரும்பவில்லை.

2.என்னுடைய உள் அமைதிக்கான கவனத்தை நான் இழந்து விட்டேன்.

3.என்னைச் சுற்றி இருக்கும் இயற்கை அழகை ரசிக்க மறந்துவிட்டேன்.

4.தியானத்தை தேடிக் கொண்டிருந்த என் ஆன்மாவை இழந்து விட்டேன்.

5.தேவையற்ற அவசரத்தில், பக்க வாட்டில் இருந்த நடைப் பாதையில் 2,3 முறை கால் இடற நேர்ந்தது. ஏன் கால்கள் கூட உடைந்திருக்கும்.

அப்பொழுது தான் எனக்கு ஞானோதயம் வந்தது. நம் வாழ்க்கையிலும் இதே போலத் தானே?

நம் உடன் பணிபுரிபவர்கள், அருகில் வசிப்பவர்கள், நண்பர்கள், குடும்பத்தாருடன் போட்டியிட்டு அவர்களை விட முன்னேற வேண்டும், அவர்களை விட வெற்றிகரமாக வாழ்ந்து காட்ட வேண்டும் என பேசி நம்முடைய ஆனந்தத்தை நாமே இழந்து கொண்டிருக்கிறோம்.

நம்முடைய நேரத்தையும், ஆற்றலையும் இவ்வாறு ஓடுவதிலேயே தொலைத்து நாம் சேர வேண்டிய உண்மையான இலக்கிற்கான பாதையை தொலைத்துக் கொண்டிருக்கிறோம்.

இந்த ஆரோக்கியமற்ற போட்டியானது ,

ஒரு முடிவில்லாமல் சுழலும் சக்கரம் போல தொடர்ந்து தொல்லை தரும்.

எப்பொழுதும் உங்களுக்கு முன்னால் ஏதோ ஒரு வகையில் யாராவது ஒருவர் முன்னுக்கு சென்று கொண்டிருப்பார்கள்.

உங்களை விட நல்ல வேலை.

நல்ல கார்.

வங்கியில் நிறைய பணம்.

நல்ல படிப்பு.

அழகிய மனைவி.

அழகான கணவன்.

நல்ல குழந்தைகள்.

நல்ல சுற்றுப்புற சூழ்நிலை.

நல்ல நிலை..........

ஆனால் நாம் முக்கியமாக உணர வேண்டியது என்னவென்றால்,

நங்கள் யாருடனும் போட்டி போடாத பொழுது, நீங்கள் நீங்களாகவே இருக்கும் பொழுது தான் நீங்கள் மிகச் சிறந்தவர் ஆகின்றீர்கள்.

சிலர் தங்கள் கவனத்தை,\

அடுத்தவர்கள் எப்படி இருக்கின்றார்கள்,?

எங்கே செல்கின்றார்கள்,?

என்ன அணிகிறார்கள்,?

என்ன வாகனம் ஓட்டுகிறார்கள்,?

என்ன பேசுகிறார்கள்?..

என்பதிலேயே செலுத்துவதால் பாதுகாப்பின்மையை உணருகின்றார்கள்.

உங்களுடைய உயரம், எடை, தோற்றத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் அதை உள்ளது உள்ள படியே ஏற்று நீங்கள் ஆசிர்வாதம் பெற்றவர் என்பதை உணருங்கள்.

கவனத்துடனும், விழிப்புணர்வுடன் ஆரோக்கியமான ஒரு வாழ்வை வாழுங்கள்.

நாம் யாருக்கும் போட்டி இல்லை.

யாரும் நமக்கு போட்டி இல்லை.

அவரவர் வாழ்க்கை அவரவர்க்கு.

ஒப்பீடு செய்தலும், போட்டி மனப்பான்மையும் நம் மன மகிழ்ச்சியை திருடுபவை. அவை உங்கள் வாழ்க்கையின் மகிழ்ச்சியைக் கொல்ல கூடியது.

மற்றவரைக் கவிழ்க்க எண்ணி நாம் கவிழ்ந்து போவது தெரியாமல் வாழ்க்கையில் நிம்மதியை இழந்துவிடுகிறோம்.

உங்களுடனே நீங்கள் போட்டியிட்டு அமைதியாக, ஆனந்தமாக, ஸ்திரமாக வாழுங்கள்.

'வாழும் இந்த காலம் வசந்தமாக அமையும்.

வாழ்வு நரகமாவதும் சொர்க்கமாவதும் நம் கையில்'


(எழுதியது யாரோ ...ஆனால் படித்ததில் பிடித்தது)


Post a Comment

புதியது பழையவை

Sports News